தோல்வி முகத்தில் ஸ்மிருதி இராணி; வாகை சூடும் கங்கனா ரனாவத்!

கங்கனா ரனாவத், ஸ்மிருதி இரானி
கங்கனா ரனாவத், ஸ்மிருதி இரானி

மக்களவைத் தேர்தலில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி சுமார் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி முகம் கண்டுள்ளார். இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகை கங்கனா ரனாவத் வெற்றி வாகை சூட உள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடந்து கொண்டிருக்கும் வேளையில், பாஜக தலைவரும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சருமான ஸ்மிருதி ராணி அமேதி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடையும் நிலையில் உள்ளார்.

ஸ்மிருதி இராணி, கிஷோரி லால் சர்மா
ஸ்மிருதி இராணி, கிஷோரி லால் சர்மா

பிற்பகல் 2.55 மணி நிலவரப்படி தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலில் காங்கிரஸின் கிஷோரி லால் சர்மா 3,64,780 வாக்குகளைப் பெற்றுள்ளார். மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி 2,59,971 வாக்குளைப் பெற்றுள்ளார். வாக்கு வித்தியாசம் 1,04,809 ஆக உள்ளதால் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி தோல்வி முகத்தில் உள்ளார்.

இதேபோல் மற்றொரு நட்சத்திர தொகுதியான இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் இந்த முறை பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். அவர் 5,19,433 வாக்குகளுடன் வெற்றி வாகை சூடும் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கங்கனா ரனாவத், விக்கிரமாதித்யா சிங்
கங்கனா ரனாவத், விக்கிரமாதித்யா சிங்

அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அம்மாநில முன்னாள் முதல்வர் வீரபத்திர சிங்கின் மகன் விக்கிரமாதித்யா சிங் 4,47,455 வாக்குகள் பெற்றுள்ளார். இருவருக்குமிடையே உள்ள வாக்கு வித்தியாசம் 71,978 ஆகும்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in