காங்கிரஸின் ஆட்சியமைக்கும் முயற்சி ஈடேறாது: குமாரசாமி திட்டவட்டம்

எச்.டி.குமாரசாமி
எச்.டி.குமாரசாமி

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முயற்சி ஈடேறாது என மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்) கட்சித் தலைவர் ஹெச்.டி.குமாரசாமி கூறியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 292 இடங்கள் ஆதரவுடன் மத்தியில் மீண்டும் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் முகாம் அலுவலகத்தில் இன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாஜக, ஜேடிஎஸ்
பாஜக, ஜேடிஎஸ்

கர்நாடகாவில் மாண்டியா (எச்.டி.குமாரசாமி) மற்றும் கோலார் (எம்.மல்லேஷ் பாபு) ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள ஜேடிஎஸ் கட்சியும், பாஜக கூட்டணியில் உள்ளது.

இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் என்டிஏ ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜேடிஎஸ் கட்சித் தலைவரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான எச்.டி.குமாரசாமி டெல்லி புறப்பட்டு சென்றார்.

கர்நாடகா மக்களவைத் தேர்தல் முடிவுகள்
கர்நாடகா மக்களவைத் தேர்தல் முடிவுகள்

முன்னதாக பெங்களூரு விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்தியில் ஆட்சி அமைக்க, காங்கிரஸும் முயற்சித்து வருவது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த குமாரசாமி, “காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் முயற்சி ஈடேறாது" என கூறினார்.

கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 17, ஜேடிஎஸ் 2 தொகுதிகள் என என்டிஏ கூட்டணி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in