‘இங்க நாங்கதான் கிங்கு’ - சோதனைகளை கடந்து சாதித்துக்காட்டிய உத்தவ் தாக்கரே, சரத் பவார்!

உத்தவ் தாக்கரே சரத் பவார்
உத்தவ் தாக்கரே சரத் பவார்

தங்களின் கட்சியின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் பறிக்கப்பட்டபோதும், பெரும் நெருக்கடிகளை கடந்து மகாராஷ்டிரா மக்களவைத் தேர்தலில் தாங்கள்தான் உண்மையான தலைவர்கள் என உத்தவ் தாக்கரேவும், சரத்பவாரும் நிரூபித்துள்ளனர்.

2019 மக்களவைத் தேர்தலுடன் ஒப்பிடும்போது தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய அளவில் பின்னடைவைச் சந்தித்த மாநிலங்களில் மகாராஷ்டிராவும் ஒன்று. ஏனென்றால் இந்த மாநிலத்தைப் போல வேறு எந்த மாநிலமும் இவ்விரு தேர்தல்களுக்கு இடையில் இதுபோன்ற அரசியல் பூகம்பத்தை சந்தித்ததில்லை. 2019ல் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணியில் இருந்தன. அப்போது மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 இடங்களில் 41 இடங்களில் இக்கூட்டணி வெற்றி பெற்றனர். என்சிபி நான்கு இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

ராகுல் காந்தி - சரத் பவார் - உத்தவ் தாக்கரே
ராகுல் காந்தி - சரத் பவார் - உத்தவ் தாக்கரே

அதே ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் உத்தவ் தாக்கரேவுக்கு மோதல் வெடித்தது. இதனால், உத்தவ் தாக்கரே என்சிபி மற்றும் காங்கிரஸுடன் இணைந்து மாநில அரசாங்கத்தை அமைத்தார். அதனை தொடர்ந்து இரண்டரை ஆண்டுகளில், உத்தவ் தாக்கரேவின் நெருங்கிய உதவியாளரான ஏக்நாத் ஷிண்டே மூலமாக, உத்தவ் தாக்கரே அரசாங்கத்தை கவிழ்த்தது பாஜக. பின்னர் உத்தவ் தாக்கரேவிடம் இருந்து சிவசேனா கட்சி, சின்னம் ஆகியவையும் பறிபோனது.

அதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சரத் பவார் குடும்பத்திலேயே பெரும் கிளர்ச்சி வெடித்தது. அவரது அண்ணன் மகன் அஜித் பவார் பாஜகவோடு இணைந்து, மகாராஷ்டிர துணை முதல்வரானார். இதனால் சரத்பவாரிடம் இருந்து கட்சியின் பெயர், சின்னம் பறிபோனது.

உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே
உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே

இதனால் தற்போதைய தேர்தலில் பாஜக கூட்டணியில் சிவசேனா பெயரில் ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரில் அஜித் பவார் போட்டியிட்டனர். அதே சமயத்தில் இந்தியா கூட்டணியில் உத்தவ் தாக்கரே சிவசேனா( உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) கட்சிகள் இடம்பெற்றன.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளது. பாஜக கூட்டணி 18 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. இதில் காங்கிரஸ் 12 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும், சிவசேனா( உத்தவ் தாக்கரே) 10 இடங்களிலும், என்சிபி( சரத் பவார்) 7 இடங்களிலும், சிவசேனா( ஷிண்டே) 6 இடங்களிலும், என்சிபி மற்றும் சுயேட்சை தலா 1 இடத்தில் முன்னிலையில் உள்ளனர்.

அஜித் பவார், சரத் பவார்
அஜித் பவார், சரத் பவார்

இந்த தேர்தலில் அதிக இடங்களில் முன்னிலையில் உள்ள காரணத்தால் தாங்களே உண்மையான தலைமை என உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் கட்சியினர் குரல் எழுப்பியுள்ளனர். இது தொடர்பான போஸ்டர்களும் மகாராஷ்டிராவில் ஒட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய தேர்தல் முடிவுகள் சிவசேனா, என்சிபி கட்சிகளில் பெரும் மாற்றத்தை உருவாக்கும் என சொல்லப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in