நாளை காலையே தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்போம் என்று சொல்லவில்லை... அண்ணாமலை விளக்கம்!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

நாங்கள் எங்கள் இலக்கில் செல்கிறோம். நாளை காலை தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கிறோம் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சியை பிடிப்போம் என்பதே இலக்கு என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை பாஜக தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “கடுமையாக போராடியும் தமிழ்நாட்டில் இருந்து பாஜக எம்.பி,க்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்பிவைக்க முடியவில்லை. பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்து இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தல் தோல்வியை படிப்பினையாக எடுத்துக் கொண்டு மேலும் உழைப்போம். அடுத்த தேர்தலில் தேஜகூ வேட்பாளர்களை வெற்றி வேட்பாளர்களாக மாற்றி பாராளுமன்றத்திற்கு அனுப்புவோம் என்று உறுதி எடுத்து இருக்கிறோம். அதே நேரத்தில் மக்கள் கொடுத்திற்கும் தீர்ப்பை பாஜக தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறது.

மக்கள் யோசித்துதான் தீர்ப்பு கொடுப்பார்கள். பாஜகவுக்கு வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகப்படுத்தி இருக்கிறார்கள். தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட 40 தொகுதியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். காரணம் மோடியின் நலத்திட்டங்கள் தமிழகம் முழுவதும் வந்து சேர வேண்டும் என்பது எங்களது ஆசை. மத்தியில் பாஜக ஆட்சி அமையவிருப்பதால், நாங்கள் என்ன ஒத்துழைப்பு நல்க முடியுமே அதை செய்வோம்.

சில இடங்களில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்பை இழந்து இருக்கிறோம். 23 தொகுதியிலே தாமரை சின்னம் மக்களிடம் பதிந்து இருக்கிறது. இதுவரை வரலாற்றில் வாங்காத வாக்குகளை வாங்கி இருக்கிறோம். மக்கள் ஒரு காரணத்திற்காக 40க்கு 40 திமுக கூட்டணிக்கு வழங்கி செய்தி சொல்லியிருக்கிறார்கள். பாஜக இன்னும் உழைக்க வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லியிருக்கிறார்கள்” என்று அவர் கூறினார்

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, “நான் வாங்கிய 4.5 லட்சம் வாக்குகள் பணம் கொடுக்காமல் வாங்கியவை.ஜெயித்தவர்களை குறை செல்லவில்லை. எங்களுடைய பணி இன்னும் கடுமையாக இருக்க வேண்டும் என்று புரிந்துகொண்டோம். தமிழகத்தில் பண அரசியலை தாண்டி தேசியத்தை மலர வைக்க வேண்டும் என்றால் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும். குறுக்கு வழியை கையாலாமால், சோர்வடையாமல் 2026ல் முன்னெடுப்போம்.

மக்கள் சொல்லி இருக்க பாடத்தை அகங்காரம் இல்லாம் ஏற்றுக்கொள்கிறோம். தமிழ்நாட்டில் பாறையை உடைத்து வெளியே வர வேண்டும் என்ற முயற்சியை பாஜக செய்கிறது. திராவிட கட்சிகளின் தோளில் சவாரி செய்யாமல் முயற்சி மேற்கொள்கிறோம். பாஜக கூட்டணியில் பெரிய தலைவர்கள் தேர்தலில் நின்றார்கள். நாங்கள் செல்லக் கூடிய பாதை சரியான பாதை என்று மக்கள் சொல்லி இருக்கிறார்கள். நாங்கள் அச்சப்பட மாட்டோம்.

கடந்த காலங்களில் 5 சீட் வாங்கிக்கோங்க. பா.ஜ.க 3 சதவீதம் வாக்குகளை தாண்டுமா? நோட்டாவை தாண்டுமா? என்றெல்லாம் கேட்டார்கள். இன்று பா.ஜ.க தொண்டர்கள் தலைநிமிர்ந்து நடக்கும் வகையில் வாக்கு பெற்றுள்ளோம். 20 ஆண்டுகளாக தாமரை போகாத தொகுதிகளில் எல்லாம் மிகப்பெரிய வாக்குகளை வாங்கியுள்ளோம். ஒரு கட்சி படிப்படியாகதான் வளரும். எனது பணி தாமரை கட்சியை வளர்ப்பதே ஆகும், அணுசரனையாக செல்வது அல்ல. பல இடங்களில் நாங்கள் அதிமுகவை பின்னுக்கு தள்ளியுள்ளோம்.

நாங்கள் எங்கள் இலக்கில் செல்கிறோம். நாளை காலை தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிக்கிறோம் என்று சொல்லவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் 2026ல் ஆட்சியை பிடிப்போம் என்பதே இலக்கு” என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in