தொடர் மழை எதிரொலி: ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் ஒகேனக்கலுக்கு இன்று காலை 10 மணி நிலவரப்படி, நீர்வரத்து விநாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதே போல் தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கோடை வெப்பத்தில் தவித்து வந்த மக்களுக்கு ஓரளவு ஆறுதல் கிடைத்துள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை

இந்த மழை காரணமாக நீர் நிலைகளுக்கும் நீர்வரத்து உயர்ந்து வருவதால் விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்கும் தற்போது பெய்து வரும் மழை கைகொடுத்து வருகிறது.

இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக காவிரி ஆற்றில் தமிழகத்தின் ஒகேனக்கல்லுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான பிலிகுண்டு பகுதிக்கு வரும் நீரின் அளவு தற்போது அதிகரித்துள்ளது. கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்பு இப்பகுதிக்கு விநாடிக்கு வெறும் 200 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

இந்நிலையில் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 1200 கன அடியாக அதிகரித்திருந்தது. இச்சூழலில் இன்று காலை 10 மணி நிலவரப்படி நீர் வரத்து மேலும் அதிகரித்து விநாடிக்கு 3500 கன அடியாக உயர்ந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in