சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு!

சென்னை உட்பட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகள் தள்ளிவைப்பு!
Updated on
2 min read

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை முழுவதுமாக புரட்டிப் போட்டு விட்டு கடந்திருக்கிறது மிக்ஜாம் புயல். இந்நிலையில் இந்த 4 மாவட்டங்களிலும் நாளை துவங்க இருந்த அரையாண்டு தேர்வுகளைத் தள்ளி வைத்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களிலும் பள்ளி தலைமையாசிரியர்களே, நிலைமை சீரான உடன், தனித்தனியே கேள்வித்தாள்கள் தயாரித்து அரையாண்டு தேர்வுகளை நடத்திட அறிவுறுத்தி உத்தரவிட்டுள்ளது.

சென்னையின் முக்கிய சாலைகளிலும் கூட இன்னும் மழைநீர் முற்றிலும் வடியாத நிலையில், திரும்புகிற இடங்களில் எல்லாம் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இந்நிலையில், நாளை சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மழை சற்றே ஓய்ந்துள்ள போதும், அடுத்த 3 மணி நேரத்திற்கு மீண்டும் சென்னையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது மக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பகுதிகளிலும் இன்னும் மின்விநியோகம் சீராக்கப்படாத நிலையில், நாளை சென்னை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பரவலாக 48 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்த நிலையில், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி சாலைகளும், குடியிருப்பு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீட்பு பணிகள் துரித கதியில் நடைப்பெற்றாலும், இன்னும் பல பகுதிகளில் பொதுமக்கள் உணவும், குடிக்க தண்ணீரும் இல்லாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

மழை வெள்ள சேத விவரங்களை கணக்கெடுத்து வரும் அரசு அதிகாரிகள், தேங்கியுள்ள மழை நீரை அப்புறப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தாழ்வான பகுதிகளிலும் பல இடங்களில் பள்ளிகள், கல்லூரிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

இதையடுத்து நாளை டிசம்பர் 7ம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு அட்டவணையிலும் மாற்றம் செய்யப்படுகிறது. நாளை நடைப்பெற இருக்கும் அரையாண்டு தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டு, நிலைமை சீரானதும், பள்ளி தலைமையாசிரியரே வேறொரு தேதிக்கு வினாத்தாள் தனித்தனியே தயாரித்து தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பாபர் மசூதி இடிப்பு தினம்; டிசம்பர் 6... கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு!

எல்லை தாண்டிய காதல்; பாகிஸ்தான் காதலியின் கரம் பிடித்து அழைத்து வந்த இந்திய காதலன்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ரூ.5060 கோடி உடனே தேவை! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

3 மணி நேரம் வெளுத்து வாங்கப்போகிறது மழை! சென்னைக்கு அடுத்த அதிர்ச்சி

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in