தங்கம் விலை திடீர் சரிவு... இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

வாரத்தின் தொடக்க நாளான இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியளித்துள்ளது.

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

சர்வதேச வர்த்தகத்தின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதற்கு ஏற்றவாறு ஆபரணத் தங்கத்தின் விலையிலும் தொடர்ந்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சற்று குறைந்து ஆறுதல் அளித்த நிலையில், இன்று மேலும் குறைந்து நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தங்கம் விலை சரிவு
தங்கம் விலை சரிவு

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.46,800-ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.5,850-ஆக விற்பனையாகிறது.

18 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.16 குறைந்து ஒரு கிராம் ரூ.4,792-க்கும், சவரனுக்கு ரூ.128 குறைந்து ஒரு சவரன் ரூ.38,336-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.22 குறைந்து, ரூ. 6,382ஆக விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் சவரன் ரூ.51,056-ஆக விற்பனையாகிறது. அதே போல், வெள்ளியின் விலையும் கிராமுக்கு 30 காசுகள் குறைந்து, கிராம் ரூ.76.70 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.76,700க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

'இந்திய இசைக்குழுவினருக்கு கிராமி' விருது... குவியும் பாராட்டுகள்!

அதிர்ச்சி... சைதை துரைசாமி மகன் என்ன ஆனார்? ஆற்றில் கார் கவிழ்ந்து விபத்து!

ஓட ஓட விரட்டி பிரபல ரவுடி வெட்டிக் கொலை... சென்னையில் பயங்கரம்!

நெருங்கும் தேர்தல்... கட்சித்தாவும் 15 எம்எல்ஏக்கள்...  அரசியலில் பரபரப்பு!

ப்பா... தூக்கம் போச்சு... ரசிகர்களை கிறங்கடித்த சோபிதா துலிபாலா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in