
பண மோசடி வழக்கில் திருவண்ணாமலையை சேர்ந்த ஏ.பி.ஆர். பைனான்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் மேலாளரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அல்தாப் என்பவர் செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏ.பி.ஆர் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தார். நிதி நிறுவனத்தில் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகை சீட்டு போட்டு பணம் வசூல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தீபாவளி சீட்டு கட்டியவர்கள் பொருட்கள் பெறுவதற்கு நிறுவனம் முன்பு குவிந்தனர். அப்போது பணம் கட்டியவர்களுக்குப் சரியான முறையில் பொருட்கள் தரவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் ஏ.பி.ஆர் நிதி நிறுவனத்தை சூறையாடினர்.
நிறுவனத்தின் குடோனில் இருந்த பொருட்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றனர். அப்போது வீடியோ ஒன்றை வெளியிட்ட நிறுவனத்தின் உரிமையாளர் அல்தாப், பொருட்கள் வாங்க சென்னை சென்றதாகவும், மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும், தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனது குடும்பத்தைக் கொலை செய்து விடுவதாக மிரட்டல்கள் வருகின்றன என்று கூறினார். இதனையடுத்து ஏ.பி.ஆர் நிதி நிறுவனத்தின் அலுவலகம், வீடு ஆகிய இடங்களில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர்
அதைத்தொடர்ந்து, ஏ.பி.ஆர் நிறுவன உரிமையாளர் அல்தாப்-ஐ போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், அல்தாப் மற்றும் கிளை மேலாளர் கமலக்கண்ணன் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் ஆந்திராவில் கைது செய்தனர்.
பின்னர் திருவண்ணாமலை விரைவு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா முன்பு ஆஜர்படுத்தினர். கைது செய்யப்பட்ட இருவரையும் வேலூர் மத்தியச் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
தீபாவளியன்று இப்படி விளக்கேற்றினால் ஐஸ்வர்ய கடாட்சம் கிட்டும்!
வெடித்து சிதறும் பட்டாசுகள்... 3 மாவட்டங்களில் காற்று மாசு அதிகரிப்பு!
மோடியை அலற வைத்த இளம்பெண்... பிரச்சார பொதுக்கூட்டத்தில் பரபரப்பு!
திருப்பதியில் இன்று தீபாவளி ஆஸ்தானம்... லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
தனுஷ் முதல் சமந்தா வரை... மூன்றாவது நபர் தலையீட்டால் பிரிந்த பிரபலங்கள்!