பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை... குடிநீர் எடுக்க வந்த போது பயங்கரம்!

ரவுடி ரவி என்ற குழந்தை ரவி
ரவுடி ரவி என்ற குழந்தை ரவி

பிரபல ரவுடி ரவி என்ற குழந்தை ரவி மர்மநபர்களால் ஓட ஓட விரட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஹசனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டத்தில் உள்ள ஹேமாவதி நகரைச் சேர்ந்தவர் ரவி என்ற குழந்தை ரவி (45). பிரபல ரவுடியான ரவி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இன்று காலை அவர் குடிநீர் எடுப்பதற்காக ஹேமாவதி நகரில் பைக்கில் ரவி சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் வழிமறித்தது. இதனால் பைக்கை போட்டு விட்டு அங்கிருந்து ரவி தப்பிக்க முயற்சித்தார். ஆனால், அந்த மர்மக்கும்பல் ஓட ஓட விரட்டி கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் ரவுடி ரவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார். அவர் உயிர் இழந்ததை உறுதி செய்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்த கொலைச்சம்பவம் குறித்து அப்பகதி மக்கள் உடனடியாக பென்ஷன் மொஹல்லா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனால் அங்கு விரைந்து வந்த போலீஸார், கொலை செய்யப்பட்ட ரவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதிக ரத்தப்போக்கு காரணமாக ரவி உயிரிழந்தது தெரிய வந்தது.

மேலும், இக்கொலை குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் சோதனை செய்து வருகின்றனர். இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், பிரபல ரவுடியான ரவியை யார் கொலை செய்தார்கள் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் பிரபல ரவுடி வெட்டிக கொலை செய்யப்பட்ட சம்பவம் ஹசன் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in