விதிகளை மீறும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டம்... துரை வைகோ வலியுறுத்தல்!

துரை வைகோ
துரை வைகோ

விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலை உரிமையாளர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடடிவக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ வலியுறுத்தியுள்ளார்.

சிவகாசி அருகே செங்கமலப்பட்டி சுதர்சன் பட்டாசு ஆலையில் கடந்த 9ம் தேதி நடந்த பயங்கர வெடி விபத்தில் 6 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர், சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் காயமடைந்த தொழிலாளர்களைச் சந்தித்து நலம் விசாரித்தார்.

பட்டாசு ஆலை வெடி விபத்து
பட்டாசு ஆலை வெடி விபத்து

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ,"பட்டாசு ஆலைகளில் விபத்துக்களைத் தடுக்க தொடர்ந்து மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நல்ல சட்டங்களைக் கொண்டு வந்து, விதிகளை கடுமையாக்கி வருகிறது. அரசின் சட்டங்கள் மற்றும் விதிகளை கடைப்பிடிக்க வேண்டியது ஆலை உரிமையாளர்களின் கடமை. முதலமைச்சர் உத்தரவுப்படி மாவட்ட ஆட்சியர் விபத்து குறித்து ஆராயக் குழுவை அமைத்துள்ளார். பட்டாசு தொழில் பல்வேறு காரணங்களால் நலிவடைந்து வரும் நிலையில் சிலர் செய்யும் தவறுகளால், நேர்மையாகத் தொழில் செய்பவர்களுக்கும் சிரமம் ஏற்படுகிறது. கடந்த 5 மாதத்தில் நடந்த 11 விபத்துகளில் 28 பேர் உயிரிழந்துள்ளனர்.

துரை வைகோ
துரை வைகோ

விதிமீறல்களில் ஈடுபடும் பட்டாசு ஆலை மற்றும் உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். கூடுதலாக லாபம் சம்பாதிப்பதற்காக அதிக தொழிலாளர்களை வைத்து உற்பத்தி செய்வதால் விபத்து ஏற்படுகிறது.

90 சதவீதம் உரிமையாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே பட்டாசு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். 10 சதவீதம் பேர் சட்ட விரோதமாகச் செயல்படுவதால், உயிரிழப்புகள் ஏற்பட்டு, பட்டாசு தொழிலுக்குப் பிரச்சினை ஏற்படுகிறது" என தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...
குருத்வாராவில் சீக்கிய தலைப்பாகை அணிந்து உணவுப் பரிமாறிய பிரதமர் மோடி!

திமுக எம்எல்ஏவின் மருமகன் வெட்டிக்கொலை.... தஞ்சையில் பயங்கரம்

தெற்கு பிரேசிலில் பலத்த மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு; 145 பேர் உயிரிழப்பு

ஜிவி பிரகாஷ் விவாகரத்து சர்ச்சை... சைந்தவி ரியாக்‌ஷன் என்ன?

காதலி கண்முன்னே பயங்கரம்... பைக்கில் சென்ற கல்லூரி மாணவன் வெட்டிக்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in