லிப்ட்டில் நாயை பலமாக தாக்கும் பராமரிப்பாளர்... வைரலாகும் வீடியோ!

லிப்ட்டில் நாயை தாக்கும் பராமரிப்பாளர்
லிப்ட்டில் நாயை தாக்கும் பராமரிப்பாளர்

குருகிராமில் அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள லிப்ட்டில் வைத்து நாயை, அதன் பராமரிப்பாளர் கொடூரமாக தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஹரியானா மாநிலம், குருகிராம், ஆர்சிட் கோல்டன் சொசைட்டி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் விதித் சர்மா என்பவர் வசித்து வருகிறார். செல்லப்பிராணி ஆர்வலரான இவர், தனது வீட்டில் வெளிநாட்டு நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். இதற்கு உணவளிப்பது, வாக்கிங் அழைத்து செல்வது, குளிப்பாட்டுவது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு இளைஞரை பணிக்கு வைத்திருந்தார். அந்த இளைஞர், வளர்ப்பு நாயை பராமரித்து வந்தார்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்நிலையில், வீட்டில் இருந்து வெளியே நாயை அழைத்து சென்றார். அப்போது லிப்ட்டில் வைத்து, நாயின் முகத்தில் இரும்பு ராடால் தொடர்ந்து தாக்கத் தொடங்கினார். நாய் எந்த எதிர்ப்பையும் காட்டாமல் அடி வாங்கிக் கொண்டே இருந்தது. பின்னர் லிப்ட் டோர் திறந்த உடன், நாயை அடிப்பதை நிறுத்திய அந்த இளைஞர், நாயை வெளியே அழைத்து சென்றார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி, சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ பார்ப்போரை கண்கலங்கவும் வைத்துள்ளது.

இந்த வீடியோவை பார்த்த நாய் உரிமையாளர், அந்த இளைஞரை பயங்கரமாக திட்டி, வேலையை விட்டு நீக்கியுள்ளார். ஆனால், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் எந்த புகாரும் பதிவு செய்யவில்லை. தொடந்து நாய் கடித்து பொதுமக்கள், சிறுவர்கள் பாதிக்கப்படுவதும், உயிரிழப்பதும் தொடர்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில், வளர்ப்பு நாயை இளைஞர் ஒருவர் பலமாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு... மத்திய அறிவிப்பு!

கர்ப்பிணிகளுக்கான ஃபேஷன் ஷோ... ரேம்ப் வாக்கில் கலக்கிய அமலாபால்!

தனுஷை விட ஐஸ்வர்யா மோசம்; முன்னாள் கணவர் ஓரினச்சேர்க்கையாளர் ...பகீர் கிளப்பும் பாடகி சுசித்ரா!

அதிகரிக்கும் வெயில்; காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளி கட்டுமானப் பணிகளுக்கு கட்டுப்பாடு!

கோவையில் பரபரப்பு... பாலியல் வழக்கில் கைதான சிறுவன் தற்கொலை முயற்சி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in