பிரைவசியை மதியுங்கள்... பிரேம்ஜி கல்யாணத்திற்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!

பிரைவசியை மதியுங்கள்... பிரேம்ஜி கல்யாணத்திற்கு வெங்கட்பிரபு வேண்டுகோள்!

’எங்கள் பிரைவசியை மதியுங்கள். திருமணம் முடிந்ததும் நானே புகைப்படங்கள் பகிர்கிறேன்’ என இயக்குநர் வெங்கட்பிரபு தனது தம்பி பிரேம்ஜி கல்யாணத்திற்கான அழைப்பை சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

நடிகர், இசையமைப்பாளர், பாடகர் எனப் பன்முகம் கொண்ட பிரேம்ஜி, இந்து என்பவரைத் திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் வருகிற ஜூன் 9ம் தேதி திருத்தணி முருகன் கோயிலில் நடக்க இருக்கிறது. இவரது திருமணப் பத்திரிக்கை இணையத்தில் கசிந்து வைரலானது.

இதனையடுத்து, பிரேம்ஜி திருமணம் பற்றி இயக்குநர் வெங்கட்பிரபு இணையத்தில் கலகலப்பான பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், ‘எங்கள் குடும்பத்தில் பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல நிகழ்வு நடக்க இருக்கிறது. வரும் ஜூன் 9ம் தேதி நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை அம்மா ஆசீர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார்.

அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்தத் திருமணத்தை எளிய முறையில் நடத்த விரும்புகிறோம். இது தெரியாமல் நண்பர் ஒருவர் இந்தத் திருமணப் பத்திரிக்கையை இணையத்தில் பகிர்ந்துவிட்டார். பத்திரிக்கை எப்படி வைரல் ஆனதோ அதுபோல, மணமகள் மீடியாவை சேர்ந்தவர் என்ற விஷயமும் வைரலாகி இருக்கிறது. அது உண்மை இல்லை.

வெங்கட்பிரபு...
வெங்கட்பிரபு...

எங்கள் பிரைவசியை மதித்து இருந்த இடத்தில் இருந்தே மணமக்களை வாழ்த்துங்கள். திருமணம் முடிந்ததும் புகைப்படங்களைப் பகிர்கிறேன். திருமண வரவேற்பில் நிச்சயம் அனைவரையும் சந்திப்போம்’ என்று கூறியுள்ளார். இதோடு விஜயின் 'GOAT' பட அப்டேட்டும் அடுத்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in