புஸ்வானமாகி போன எக்சிட் ஃபோல்... மக்கள் தந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள்!

எக்சிட் ஃபோல்
எக்சிட் ஃபோல்

பாஜக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற தேர்தல் முடிந்தவுடன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளைப் பின்னுக்குத் தள்ளி எதிர்கட்சிகள் அதிக தொகுதிகளில் வென்று அதிர்ச்சியைத் தந்துள்ளன.

இந்தியாவின் 18வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 19-ம் தேதி முதல்கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 44 நாட்களில் அடுத்தடுத்த கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத்தில் மட்டும் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மீதமுள்ள 542 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.

வாக்களிக்க வந்த மக்கள்
வாக்களிக்க வந்த மக்கள்

முதற்கட்ட தேர்தலில் 66.1 சதவீதம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டத் தேர்தலில் முறையே 66.7 சதவீதம் மற்றும் 61 சதவீதத வாக்குகள் பதிவாகின. இதேபோல் நான்காம் கட்டத் தேர்தலில் 67.3 சதவீத வாக்குகள், ஐந்தாம் கட்ட தேர்தலில் 60.5 சதவீத வாக்குகள், ஆறாம் கட்ட தேர்தலில் 63.4 சதவீத வாக்குகள் பதிவாகின. கடைசி கட்டமாக ஏழாம் கட்டத் தேர்தலில் 62 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஜூன் 1-ம் தேதியன்று தேர்தல் முடிவடைந்தவுடனே பல்வேறு நிறுவனங்கள் எக்சிட் ஃபோல் நடத்தின. அவை நடத்திய கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தகவல்களை வெளியிட்டன. அத்துடன் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 60 இடங்களையே பிடிக்கும் என்றும் ஆருடம் கூறின.

மக்களவைத் தேர்தல்
மக்களவைத் தேர்தல்

அப்படி கருத்துக்கணிப்பு நடத்திய ஆக்சிஸ் மை இந்தியா, பாஜகவிற்கு 322 முதல் 340 தொகுதிகள் கிடைக்கும் என்று கூறியது. அத்துடன் இந்தியா கூட்டணி 60 முதல் 76 இடங்களைப் பிடிக்கும் என்று கூறியது. டுடே சாணக்கியன் கருத்துக் கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி இடங்களில் வெல்லும் என்று கணித்துள்ளது.

இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் கருத்துக் கணிப்பின்படி தேசிய ஜனநாயக கூட்டணி 400 இடங்களை வெல்லும் என்றது. நியூஸ்18 மெகா எக்சிட் ஃபோல்படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 370 தொகுதிகளும், இந்தியா கூட்டணிக்கு 140 இடங்களும் கிடைக்கும் என்று கணித்திருந்தது.

ரிபப்ளிக் டிவி மேட்ரைஸ் நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 352 முதல் 368 இடங்களையும், இந்தியா கூட்டணி 131 முதல் 166 இடங்களைப் பிடிக்கும் என்று கூறியது. பிற கட்சிகள் 43 முதல் 48 இடங்களைப் பிடிக்கும் என்று அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டது. ரிபப்ளிக் பாரத் பி மார்க் நடத்திய கருத்துக்கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 359 இடங்களையும், இந்தியா கூட்டணி 154 தொகுதிகளையும், பிற கட்சிகள் 30 இடங்களையும் பிடிக்கும் என்று கூறியது.

எக்சிட் ஃபோல்
எக்சிட் ஃபோல்

ஜன் கி பாத் நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 377 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 151 தொகுதிகளையும், பிற கட்சிகள் 10 முதல் 20 தொகுதிகளையும் பிடிக்கும் என்று கூறியது.

எக்சிட் ஃபோல்
எக்சிட் ஃபோல்

ஆனால், இந்தக் கருத்துக்கணிப்புகளைப் பொய்யாக்கும் வகையில் மக்கள் வாக்களித்துள்ளனர். குறிப்பாக இது கருத்துக் கணிப்பல்ல, கருத்து திணிப்பு என எதிர்கட்சியினர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தனர்.

அதை மெய்ப்பிக்கும் வகையில் இந்தியா கூட்டணிக்கு அதிக இடங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பது வாக்கு எண்ணிக்கையின் மூலம் தெரிய வந்துள்ளது. எக்சிட் ஃபோல் சொன்னது போல் இல்லாமல் இந்தியா கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in