நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடுவை தொடர்பு கொள்ளவில்லை: மறுக்கும் சரத் பவார்

சரத் பவார்
சரத் பவார்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு ஆகியோரை தொடர்பு கொண்டு சரத் பவார் பேசியதாக வெளியான தகவலை அவர் மறுத்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், மாலை 4 மணி நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 290 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இந்தியா கூட்டணி 234 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.

எனினும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இந்த தேர்தல் முடிவானது அதிர்ச்சி முடிவாக உள்ளதாக அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் 400-க்கும் அதிகமான இடங்களை என்டிஏ கூட்டணி கைப்பற்றும் என கூறினர்.

மக்களவைத் தேர்தல் முடிவுகள்
மக்களவைத் தேர்தல் முடிவுகள்

இந்நிலையில் பாஜக மட்டும் தனித்து 240 தொகுதிகளிலும் மற்ற இடங்களில் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கையை சேர்த்தால் 290-க்கும் மேலான இடங்களைப் பெறுகிறது.

இச்சூழலில் பாஜக கூட்டணியில் உள்ள பிகார் மாநிலம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார், ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவு முக்கியமானதாக உள்ளது.

இவர்கள் தற்போது பாஜக கூட்டணியில் உள்ள நிலையில், இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவரான மகாராஷ்டிராவின் தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் பிரிவு) தலைவர் சரத் பவார், நிதிஷ்குமாரையும், சந்திரபாபு நாயுடுவையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்தியா கூட்டணிக்கு வருமாறு அழைப்பு விடுத்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகின. இதன் காரணமாக அரசியல் களம் மேலும் சூடுபிடித்து பரபரப்பான கட்டத்தை எட்டியது.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

இச்சூழலில் செய்தியாளர்களை சந்தித்த மூத்த அரசியல் தலைவரான சரத் பவார், இதனை மறுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் அல்லது வேறு யாருடனும் நான் பேசவில்லை" என்றார்.

பாஜகவுக்கு இந்த முறை உத்தரப் பிரதேசத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பிற்பகல் 3 மணி நிலவரப்படி, அம்மாநிலத்தில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தன. பாஜக 30 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. கடந்த 2014, 2019 மக்களவைத் தேர்தல்களில் உத்தரப் பிரதேசத்தில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in