மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வேண்டும்: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

ராகுல்காந்தி
ராகுல்காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்

இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மணீஷ் திவாரி, டி.கே.சிவகுமார், ரேவந்த் ரெட்டி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பதவியேற்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், மக்களவைத் தேர்தல் பிரசாரத்தை மிகச் சிறப்பாக மேற்கொண்டதற்காக ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், “மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஏற்குமாறு ராகுல் காந்தியை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஒருமனதாகக் கேட்டுக் கொண்டது. நாடாளுமன்றத்திற்குள் இந்தப் பணியை முன்னெடுப்பதற்கு ராகுல் காந்திதான் சிறந்தவர். இதுகுறித்து அவர் விரைவில் முடிவெடுப்பார்.

தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் எங்கள் தலைவர் மற்றும் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். காங்கிரஸின் மறுமலர்ச்சி தொடங்கியுள்ளது. செயற்குழு கூட்டத்தில் நான்கு மாதங்களுக்கு முன்னர் இருந்த சூழல் முற்றிலும் மாறியுள்ளது” என்று கூறினார்.

காங்கிரஸ் செயற்குழுவின் தீர்மானத்தில், ‘பாரத ஒற்றுமை நடைப்பயணம் மற்றும் பாரத நீதி பயணம் என இரு நடைப்பயணங்களுக்கு தலைமைதாங்கி நடத்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சிக்கு பலம் சேர்த்தார். அவரது சிந்தனை மற்றும் ஆளுமையை பிரதிபலிக்கும் இந்த இரண்டு யாத்திரைகளும் நமது தேசத்தின் அரசியலில் வரலாற்று திருப்புமுனையாக அமைந்தது. இந்த யாத்திரைகளால் லட்சக்கணக்கான நமது தொண்டர்கள் மற்றும் கோடிக்கணக்கான நமது வாக்காளர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் செயற்குழு கூட்டம்
காங்கிரஸ் செயற்குழு கூட்டம்

ராகுல் காந்தியின் தேர்தல் பிரச்சாரம் ஒற்றை எண்ணம், கூர்மை மற்றும் தெளிவானதாக அமைந்தது. 2024 தேர்தலில் நமது அரசியலமைப்பின் பாதுகாப்பை மையப் பிரச்சினையாக மாற்றியவர் அவர். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற ஐந்து நியாயம், ஐந்து உறுதிமொழி திட்டம் அனைத்துத் தரப்பு மக்களிடையே ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. அதில் அவர் இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், தலித்துகள், ஆதிவாசிகள், ஓபிசி மற்றும் சிறுபான்மையினர் குறித்த திட்டங்களை தெரிவித்திருந்தார்.

நாம் மீண்டு, புத்துயிர் பெற்றுள்ளோம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் தேசத்தின் அரசியல் வாழ்வில் ஒரு காலத்தில் கட்சி வகித்த தலைசிறந்த இடத்தைப் பிடிக்க நாம் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது. காங்கிரஸுக்கு இன்னொரு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இப்போது நாம் அதை இன்னும் வலிமையானதாக உருவாக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in