சிறையிலிருந்தபடியே பஞ்சாப் தேர்தலில் போட்டி; காலிஸ்தானி பிரிவினைவாதி அம்ரித்பால் சிங் 1,59,000 வாக்குகள் முன்னிலை!

'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்
'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்

பஞ்சாபின் கதூர் சாஹிப் மக்களவைத் தொகுதியில் சிறையிலிருந்தபடியே சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட காலிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதியும், வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவருமான அம்ரித்பால் சிங்கின் 1 லட்சத்து 59 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடாக்க வேண்டும் எனக்கோரி வருபவர் அம்ரித் பால் சிங். இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் `ஆபரேஷன் புளூ ஸ்டார்' மூலம் சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் கிளர்ச்சியாளர் பிந்தரன் வாலேவை அடியொற்றி, `வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார்.

'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்
'வாரிஸ் பஞ்சாப் டி' - அம்ரித்பால் சிங்

அம்ரித்பால் சிங் கடந்த ஆண்டு ஏப்ரலில் பஞ்சாப் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் செயல்படுத்தப்பட்டது. அவரும் அவரது கூட்டாளிகள் ஒன்பது பேரும் தற்போது அசாமின் திப்ருகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர் சிறையிலிருந்தபடியே வேட்புமனுத்தாக்கல் செய்து கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டார்.

அம்ரித்பால் சிங்
அம்ரித்பால் சிங்

தற்போதைய நிலவரப்படி கதூர் சாஹிப் தொகுதியில் அம்ரித்பால் சிங் 347667 வாக்குகளும், காங்கிரஸ் சார்பில் குல்தீப் சிங் ஜிரா 188568 வாக்குகளும், ஆம் ஆத்மி சார்பில் லால்ஜித் சிங் புல்லர் 177502 வாக்குகளும், பாஜக சார்பில் மஞ்சித் சிங் மன்னா 75838 வாக்குகளும், அகாலி தளம் சார்பில் விர்சா சிங் வால்டோஹா 75263 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் காங்கிரஸ் வேட்பாளரைவிட அம்ரித்பால் சிங் 159099 வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in