மக்களால் நிராகரிக்கப்பட்ட மோடி, சந்திரபாபு நாயுடுவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்... சாடும் காங்கிரஸ்

மோடி அருகே சந்திரபாபு நாயுடு; உடன் நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே
மோடி அருகே சந்திரபாபு நாயுடு; உடன் நிதிஷ் குமார், ஏக்நாத் ஷிண்டே

’நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட மோடி, ஆட்சி அதிகாரத்துக்காக சந்திரபாபு நாயுடுவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்’ என்று மோடி மீது காங்கிரஸ் கட்சி தாக்குதல் தொடுத்துள்ளது.

மூன்றாம் முறையாக ஆட்சியமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை இழந்த பாஜக, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு மத்தியில் ஆட்சி அமைக்க இருக்கிறது. இந்த கூட்டணியில் பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முதல்வராக பதவியேற்க இருப்பவருமான சந்திரபாபு நாயுடு ஆகியோர் பிரதான இடம் பிடித்துள்ளனர்.

சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்
சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார்

இருவரில் கிங் மேக்கராக வரலாறு படைத்துள்ள சந்திரபாபு நாயுடுவுக்கு மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் ராஜ மரியாதை தந்து வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடி தேர்வு செய்யப்பட்ட கூட்டத்தில் சந்திரபாபு நாயுடுவை அருகில் அமர்த்தி மரியாதை அளித்தார் மோடி. கூட்டணியில் நிதிஷ் குமாரின் இருப்பை ஏற்கனவே உறுதி செய்திருந்த பாஜக தலைவர்கள், சந்திரபாபு நாயுடு ஆதரவை சந்தேகத்துடனே அணுகினார்கள். பாஜக தலைவர்களின் கவலை போக்கும் வகையில் நாயுடுவும் தனது கூட்டணி இருப்பை வலுவாக உறுதி செய்துள்ளார்.

தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்தை அடுத்து, தனது ஆதரவு தொடர்பான செய்தியாளர்களிடம் கேள்விகளுக்கு பதிலளித்த சந்திரபாபு நாயுடு, “நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருக்கிறோம். தேர்தலில் இணைந்து போட்டியிட்டது போன்றே இப்போதும் தொடர்கிறோம். உங்களுக்கு ஏன் அந்த சந்தேகம் என்று எனக்குத் தெரியவில்லை” என்றார்.

ஆந்திராவில் உள்ள 25 மக்களவைத் தொகுதிகளில், தெலுங்கு தேசம் 16 இடங்களையும், பாஜக 3 இடங்களையும், பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி 2 இடங்களையும் வென்றது. இதன் மூலம் ஆந்திராவில் இருந்து 21 எம்பிக்களை பெற்றுள்ளது தேஜகூ. கூடவே சட்டப்பேரவை தேர்தலில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் 135 இடங்களை வென்று அடுத்த முதல்வராகவிருப்பதாலும் சந்திரபாபு நாயுடுவின் மதிப்பு கூட்டணியில் எகிறியுள்ளது.

கூட்டணியில் தனக்கு அருகிலேயே சந்திரபாபு நாயுடுவை அமரவைத்து மோடி அழகு பார்த்த தருணத்தில், மோடி - சந்திரபாபு நாயுடு இடையிலான முந்தைய அரசியல் மோதல்கள் மற்றும் சாடல்களை காங்கிரஸ் கட்சி சுற்றுக்கு விட்டு வருகிறது. பாஜகவுடன் கூட்டணியில் இருந்த தெலுங்கு தேசம் அதன் முக்கிய கோரிக்கையான ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் 2018-ல் கூட்டணியை விட்டு சந்திரபாபு நாயுடு வெளியேறினார்.

சந்திரபாபு நாயுடு
சந்திரபாபு நாயுடு

நாயுடுவின் கோரிக்கையை பாஜக நிறைவேற்றி இருப்பின் ஆந்திர மக்களின் ஆதரவைப் பெற்று அடுத்தாண்டு நடைபெற்ற ஆந்திர தேர்தலில் சந்திரபாபு ஆட்சியை பிடித்திருப்பார். ஆனால் அதற்கு வழியில்லாததில் ஜெகன்மோகன் முதல்வரானார். எதிர்க்கட்சி வரிசைக்குப் போன சந்திரபாபு நாயுடு, சட்டப்பேரவையில் கண்ணீர், சிறைவாசம் என 70 சொச்ச வயதில் கடும் போராட்டங்களை எதிர்கொண்டார்.

மோடி - நாயுடு இடையிலான மோதல்களில் அனல் பறந்தவற்றை பகிர்ந்திருக்கும் காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ், “ நாட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட மோடி, ஆட்சி அதிகாரத்தை தொடர்வதற்காக சந்திரபாபு நாயுடுவிடம் கெஞ்சிக்கொண்டிருக்கிறார்” என்று தாக்கியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in