விளவங்கோடு சட்டப் பேரவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலை

விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்
விளவங்கோடு தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட்

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிர்ஸ வேட்பாளர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் உள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-வாக இருந்த விஜயதரணி, மக்களவைத் தேர்தலுக்கு முன்பு அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். அதன் பிறகு அவர் தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இதன் காரணமாக விளவங்கோடு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை
விளவங்கோடு சட்டப் பேரவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுடன் விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தொகுதியில் இந்த முறை காங்கிரஸ் கட்சி சார்பில் தாரகை கத்பர்ட், அதிமுக சார்பில் ராணி, பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நாடு முழுவதும் இன்று காலை முதல் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் விளவங்கோடு சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகளும் வெளியாகி வருகின்றன.

தாரகை கத்பர்ட், வி.எஸ்.நந்தினி, ராணி, ஜெமினி
தாரகை கத்பர்ட், வி.எஸ்.நந்தினி, ராணி, ஜெமினி

அதன்படி காலை 11 மணி நிலவரப்படி 3 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 13,155 வாக்குகளும், பாஜக வேட்பாளர் வி.எஸ்.நந்தினி 5,066 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ராணி 941 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 903 வாக்குகளும் பெற்றுள்ளனர். தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணி முன்னணியில் உள்ள நிலையில் விளவங்கோடு சட்டப் பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை வகிப்பதால், அக்கட்சி தொண்டர்கள் இரட்டை மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in