தான் எதிர்கொண்ட அனைத்து தேர்தல்களிலும் வென்றிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் பாராட்டு!

திமுக தலைவர் ஸ்டாலின் உடன் கமல்
திமுக தலைவர் ஸ்டாலின் உடன் கமல்

திமுகவின் தலைவராக, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் வெற்றியைக் குவித்திருக்கிறார் என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘திமுக அரசு செய்துகாட்டிய பணிகளால் கிடைத்த வெற்றியை அதன் தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் அறுவடை செய்திருக்கிறது. மக்களுக்காகச் சிந்தித்து, மக்கள் பணிகளுக்கு முன்னுரிமை கொடுத்து நடத்தப்பெறும் நல்லாட்சிக்கு ஆதரவளிக்க மக்களும் தயாராக இருப்பதையே இந்த மாபெரும் வெற்றி காட்டுகிறது.

திமுகவின் தலைவராக 2019 மக்களவைத் தேர்தலில் தொடங்கி, தான் எதிர்கொண்ட அனைத்துத் தேர்தல்களிலுமே அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் வெற்றியைக் குவித்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுகளும், வாழ்த்துகளும்.

கமல் ஹாசன்
கமல் ஹாசன்

இந்தியாவைக் காக்கும் போரில், திமுகவுடன் இணைந்து களம் கண்ட கூட்டணிக் கட்சியினருக்கும், மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்களுக்கும், எங்கள் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். சிந்தாமல் சிதறாமல் சந்தேகம் இல்லாமல் நாம் பெற்றிருக்கும் இந்த வெற்றி, இந்தியாவுக்கு வழியும், ஒளியும் காட்டக்கூடியவை. இந்தியா வாழ்க, தமிழ்நாடு ஓங்குக, தமிழ் வெல்க’ என்று அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தற்போதைய நிலவரப்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 293 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 99 இடங்களுடன் சேர்ந்து இந்தியா கூட்டணி 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அதேபோல தமிழகத்தில் திமுக கூட்டணி 40 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் திமுக கூட்டணியில் இருந்தது. அந்தக் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டிருந்தது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in