கிங் மேக்கராகிறார் சந்திரபாபு நாயுடு: வலைவீசும் பாஜக, இந்தியா கூட்டணி!

சந்திரபாபு நாயுடு - தெலுங்கு தேசம்
சந்திரபாபு நாயுடு - தெலுங்கு தேசம்

மக்களவைத் தேர்தலில் பாஜக, இந்தியா கூட்டணி இடையே ஆட்சி அமைப்பதில் இழுபறி உருவாகும் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் ஆந்திராவில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 272 தொகுதிகளைப் பெறும் கட்சியால் ஆட்சியைக் கைப்பற்ற முடியும். தற்போதைய நிலவரப்படி பாஜக தனிப்பெரும் கட்சியாக சுமார் 240 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி 290 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் 97 இடங்களுடன் சேர்ந்து 233 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது இந்தியா கூட்டணி.

ராகுல் காந்தி - பிரதமர் மோடி
ராகுல் காந்தி - பிரதமர் மோடி

கடந்த 2014 மற்றும் 2019ல் தனிப்பெரும் கட்சியாக ஆட்சியமைத்த பாஜக, இம்முறை மற்ற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைக்கும் சூழலுக்கு உள்ளாகியிருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் 16 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 14 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலிலும் இப்போது மகத்தான வெற்றிபெற்று அம்மாநில முதல்வராக இருக்கிறார் சந்திரபாபு நாயுடு.

சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரம்
சந்திரபாபு நாயுடு தேர்தல் பிரச்சாரம்

எனவே சிக்கலின்றி பாஜக ஆட்சியமைக்க வேண்டுமானால், சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு முக்கியம். இதனால் முன்னிலை நிலவரங்கள் வந்தவுடனே சந்திரபாபு நாயுடுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார் நரேந்திரமோடி. அதே நேரத்தில் இந்திய கூட்டணியின் மூத்த தலைவர் சரத் பவாரும் சந்திரபாபு நாயுடுவிடம் பேசியுள்ளார். அதேபோல காங்கிரஸ் தலைவர் கார்கே தரப்பிலிருந்து அவரை தொடர்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சந்திரபாபு நாயுடுவுக்கு இருதரப்பில் இருந்தும் பெரிய உத்தரவாதங்கள் அளித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. சந்திரபாபு நாயுடு மீண்டும் தேசிய அளவில் லைம் லைட்டிற்கு வந்து, கிங்மேக்கராகியுள்ளது அக்கட்சியினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in