ஆன்ட்ராய்டில் தாக்குதல் அபாயம்: பயனர்கள் அப்டேட் செய்துகொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்

ஆன்ட்ராய்டில் தாக்குதல் அபாயம்
ஆன்ட்ராய்டில் தாக்குதல் அபாயம்

மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு (சிஇஆர்டி-ஐஎன்), ஆண்ட்ராய்டில் உள்ள பல பாதிப்புகள் குறித்து பயனர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு வெர்ஷன்கள் 12, 12எல், 13 மற்றும் 14 ஆகியவை பாதிப்புகளை சந்திக்கும் அபாயம் உள்ளதாக 'சிஇஆர்டி-ஐஎன்' எச்சரிக்கை விடுத்துள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தகவலில் "ஆண்ட்ராய்டில் பல பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது தாக்குதல்காரர்கள் (attacker) முக்கியமான தகவல்களைப் பெறுவதற்கும், ஆதாயங்களைப் பெறுவதற்கும், தாக்குதலுக்குள்ளாகும் பயனரின் இயங்குதளத்தில் சேவை நிலையை முடக்குவதற்கும் (டிஓஎஸ்) பயன்படுத்தப்படலாம்.

 இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு (சிஇஆர்டி-ஐஎன்)
இந்திய கணினி அவசரகால நடவடிக்கை குழு (சிஇஆர்டி-ஐஎன்)

கட்டமைப்பு (Framework), சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட்டுகள், கர்னல், ஆர்ம் காம்போனன்ட்ஸ், மீடியா டெக் காம்போனன்ட்ஸ், கற்பனை தொழில்நுட்பங்கள் மற்றும் குவால்காம் மூடிய ஆதார பகுதிகள் (Qualcomm closed-source components) ஆகியவற்றில் உள்ள குறைபாடுகள் காரணமாக ஆண்ட்ராய்டில் இந்த பாதிப்புகள் உள்ளன.

எனவே, அசல் உபகரண உற்பத்தியாளர்கள் வெளியிடும் அப்டேட்டுகளை பயனர்கள் செய்து கொள்ள வேண்டும்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்ட்ராய்டு பயனர்கள்
ஆன்ட்ராய்டு பயனர்கள்

கடந்த வாரம், 'செக்பாயிண்ட் நெட்வொர்க் செக்யூரிட்டி கேட்வே' தயாரிப்புகளில் உள்ள பாதிப்புகள் குறித்து 'சிஇஆர்டி-ஐஎன்' எச்சரித்தது. அதாவது, ஹேக்கர்கள் பயனர்களின் தரவுகளை பெறும் வகையிலான பாதிப்புகள் உள்ளதாக எச்சரிக்கப்பட்டது.

தேசிய சைபர் பாதுகாப்பு முகமை அமைப்பின் ஆலோசனையின்படி, தாக்குதல்காரர்கள் "IPSec VPN, தொலைநிலை அணுகல் VPN அல்லது மொபைல் மூலம் கையாளக்கூடிய மென்பொருள்களுடன் கட்டமைக்கப்பட்ட இணைய நுழைவாயில்கள் பற்றிய சில தகவல்களை பெறுவதற்கு தாக்குதலில் ஈடுபடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in