வி.கே.பாண்டியனை நோக்கி நீளும் விரல்கள்... ஒடிசாவில் தாமரை மலர இவர்தான் காரணமா?

நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக் உடன் வி.கே.பாண்டியன்

ஒடிசா மாநிலத்தில் கால்நூற்றாண்டு காலமாக நீடித்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சிக்கு சரிவு ஏற்பட்டதற்கும், அங்கே பாஜகவின தாமரை மலர வாய்ப்பு எழுந்திருப்பதற்கும் வி.கே.பாண்டியன் என்னும் தமிழரை நோக்கியே விரல்கள் நீண்டு வருகின்றன.

மக்களவைத் தேர்தலுடன் ஒரு சில மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களும் சேர்ந்தே நடைபெற்றதில், இன்றைய தினம் அவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை நிலவரங்களும் வெளியாகி வருகின்றன. அவற்றில் ஆந்திரா, ஒடிசா போன்றவை ஆட்சி மாற்றத்தை கோரியுள்ளன. ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் கட்சி பின்னடைவை சந்திக்க, பிரதான எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் முன்னேறி வருகிறது.

நரேந்திர மோடி -நவீன் பட்நாயக்
நரேந்திர மோடி -நவீன் பட்நாயக்

இந்த வரிசையில் ஒடிசா மாநிலத்தில் ஆளும் பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி பின்னடைவை சந்திக்க, பாஜக முன்னேறி வருகிறது. சுமார் கால்நூற்றாண்டு காலமாக ஒடிசாவில் தொடர்ந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சிக்கு பாஜக முடிவுரை எழுதவிருக்கிறது. இந்த சட்டபேரவைத் தேர்தலை பிஜு ஜனதா தளத்துடன் இணைந்தே பாஜக எதிர்கொள்ளத் திட்டமிட்டிருந்தது. மத்தியில் ஆளும் பாஜக ஆட்சிக்கும் பிஜு ஜனதா தளத்தின் தலைவரும், ஒடிசா முதல்வருமான நவீன் பட்நாயக் ஆதரவு நல்கியே வந்தார். ஆனால் பிஜத - பாஜக இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை வெற்றிபெறாததன் பின்னணியில் வி.கே.பாண்டியன் என்பவரை பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டினர்.

தமிழரான வி.கே.பாண்டியன் பணி நிமித்தம் ஒடிசாவில் புழங்கியபோது, முதல்வர் நவீன் பட்நாயக்கின் பெருநம்பிக்கையை பெற்றவர். மாநில ஆட்சியின் பல வெற்றிகரமான திட்டங்களின் பின்னணியில் வி.கே.பாண்டியன் இருந்தார். ஆட்சியைத் தொடர்ந்து கட்சியிலும் பாண்டியனின் ராஜ்ஜியம் தொடங்கியது. இதனை பிஜத இரண்டாம் கட்டத் தலைவர்கள் ரசிக்கவில்லை. ஆட்சி மற்றும் கட்சியில் தமிழரான வி.கே.பாண்டியனின் ஆதிக்கத்தை அவர்கள் விரும்பவில்லை. நவீன் பட்நாயக்கின் தள்ளாமை காரணமாக அவருக்கு அனைத்துமாக இருந்த வி.கே.பாண்டியனே இந்த தேர்தலை முன்னிருந்து நடத்தினார்.

வி.கே.பாண்டியன்
வி.கே.பாண்டியன்

தேர்தல் பிரச்சார களத்திலும் இதுவே பேசுபொருளானது. மோடி முதல் அமித் ஷா வரை பாஜக தலைவர்கள் அனைவரும், தமிழரான பாண்டியன் ஒடிசாவை மறைமுகமாக ஆள முயற்சிக்கிறார் என்றும் முதல்வர் நவீன் பட்நாயக்கை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார் என்றும் பிரச்சாரம் செய்தன. ஒடியாவின் பாரம்பரியத்தை காப்பதற்கு, தமிழரின் பிடியிலிருந்து ஒடிசாவை காக்க வேண்டும் என்று அவர்கள் குரல் எழுப்பினார்கள். முக்கியமாக பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி யார் கையில் இருக்கிறது தெரியுமா என்ற பாஜக எழுப்பிய உணர்வுபூர்வமான சர்ச்சை ஒடியா மக்களை புரட்டிப்போட்டது. இந்த வகையில் பிஜு ஜனதா தளத்தின் வெற்றிகரமான ஆட்சிக்கு வித்திட்ட வி.கே.பாண்டியன், அதன் ஆட்சி முடிவதற்கும் காரணமாகி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in