கேரளாவில் வெற்றிக்கணக்கை தொடங்கியது பாஜக: திருச்சூர் தொகுதியில் சுரேஷ்கோபி வெற்றி!

சுரேஷ் கோபி
சுரேஷ் கோபி

கேரளாவில் திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி பெற்றுள்ள நிலையில், திருவனந்தபுரம் தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகருக்கும் சசி தரூருக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது.

கேரளாவில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளுக்கும் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி அங்கு முன்னிலை வகித்து வருகிறது. 17 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆலத்தூர் தொகுதியில் மட்டும் முன்னிலை வகித்து வருகிறது.

கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

வாக்கு எண்ணிக்கை துவங்கியதிலிருந்து திருச்சூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி முன்னிலையில் இருந்து வந்தார். இந்த நிலையில் 3 லட்சத்து 93 ஆயிரத்து 273 வாக்குகளை பெற்ற அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமாரை விட 73 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முரளிதரனை விட 81 ஆயிரம் வாக்குகளும் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

கேரளா காங்கிரஸ்
கேரளா காங்கிரஸ்

இதேபோல் திருவனந்தபுரம் தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியின் சசி தரூருக்கும், பாஜகவின் மத்திய அமைச்சராக உள்ள ராஜீவ் சந்திரசேகருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. சசி தரூர் 3,900 வாக்குகள் முன்னிலையில் இருக்கும் நிலையில், இருவருக்கும் இடையே கடும் இழுபறி நிலவுகிறது. திருச்சூர் தொகுதி வெற்றியின் மூலம் கேரள மாநிலத்தில் இருந்து முதல்முறையாக மக்களவைக்குள் பாஜக நுழைகிறது.

இதற்கு முன்னதாக 2004ம் ஆண்டு என்டிஏ கூட்டணியில் இருந்து கேரளா காங்கிரஸ் கட்சியின் சார்பில் பிசி தாமஸ் வெற்றி பெற்று எம்பி-யாக பதவி வகித்துள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜகோபால் எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in