தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் பாஜக டெபாசிட் காலி!

பாஜக கட்சி அலுவலகம் கமலாலயம்
பாஜக கட்சி அலுவலகம் கமலாலயம்

தமிழ்நாட்டில் 19 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, 10 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியைப் பெற்றுளளது. திமுக போட்டியிட்ட 21 தொகுதிகள், காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 , இந்திய கம்யூனிஸ்ட் 2, விடுதலை சிறுத்தைகள் 2, மதிமுக 1, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி 1, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1 ஆகிய 39 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

அதேபோன்று புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிட்ட ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. 40 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி அத்தனை தொகுதிகளிலும் டெபாசிட் தொகையை இழந்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அதிமுக தமிழகத்தில் மட்டும் 32 இடங்களில் போட்டியிட்டது. இக்கூட்டணியில் உள்ள தேமுதிக 5, புதிய தமிழகம் 1, எஸ்டிபிஐ 1 என 7 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் அதிமுக போட்டியிட்ட 32 இடங்களிலும் படுதோல்வி அடைந்தது. இதில் அதிமுக நெல்லை, கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது. விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.

தமிழகத்தில் பாஜக தலைமையில் பாமக, அமமுக, ஐஜேகே, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன. இதனால் பாஜக கூட்டணி கட்சிகள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 தொகுதிகளில் போட்டியிட்டன.

பாஜக
பாஜக

பாஜக 19 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில் 10 தொகுதிகளில் அக்கட்சி டெபாசிட் தொகையை இழந்துள்ளது. அதன்படி. வடசென்னை, சிதம்பரம், கரூர், நாகப்பட்டினம், நாமக்கல், தஞ்சாவூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய 10 தொகுதிகளில் பாஜக டெபாசிட் இழந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in