மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசத்தில் பாஜகவிற்கு பெரும் பின்னடைவு... முந்தும் இந்தியா கூட்டணி கட்சிகள்!

இந்தியா கூட்டணி
இந்தியா கூட்டணி

மகாராஷ்டிரா மற்றும் உத்தரபிரதேசத்தில் பாஜக கூட்டணிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியா கூட்டணி இந்த மாநிலங்களில் கணிசமான தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி 12 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது. இந்தியா கூட்டணியில் உள்ள உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா கட்சி 9 இடங்களிலும், சரத்பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும் முன்னிலையில் இருந்து வருகின்றனர். இங்கு இந்த இரண்டு கட்சிகளையும் பிளவுபடுத்தி தனியாக கட்சி கண்ட முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா கட்சி 7 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருந்து வருகிறது. இதே போல் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவு ஒரு இடத்தில் மட்டும் முன்னிலையில் இருந்து வருகிறது.

தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி
தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி

சுமார் 28 தொகுதிகளில் இந்தியா கூட்டணி இங்கு முன்னிலையில் இருந்து வருகிறது. இதே போல் பாரதிய ஜனதா கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் உத்தரப்பிரதேச மாநிலத்திலும் பாஜகவிற்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது, பாரதிய ஜனதா கட்சி 62 இடங்களையும், பகுஜன் சமாஜ் கட்சி 10 இடங்களிலும், சமாஜ்வாதி கட்சி 5 இடங்களிலும் அப்னா தள் (சோனேலால்0 கட்சி இரண்டு இடத்திலும், காங்கிரஸ் கட்சி ஒரு இடத்திலும் வென்றிருந்தது. இந்த முறை கருத்துக்கணிப்புகள் வெளியான போது, உத்தர பிரதேசத்தில் பாஜகவிற்கு 74 இடங்கள் வரை கிடைக்கும் என பெரும்பாலான நிறுவனங்களும் கூறி இருந்தன.

யோகி - மோடி
யோகி - மோடி

இன்று வாக்கு எண்ணிக்கை துவங்கியதில் இருந்து பாஜகவிற்கு பெரும்பாலான தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டது. சமாஜ்வாதி கட்சி 36 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 7 இடங்களிலும் தற்போது முன்னிலை வகித்து வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி இங்கு 33 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. ராஷ்ட்ரிய லோக் தள் கட்சி இரண்டு தொகுதியிலும், ஆசாத் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும், அப்னா தள் (சோனேலால்) கட்சி ஒரு இடத்திலும் முன்னிலை வகித்து வருகின்றன. இது பாஜகவிற்கு பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in