நவீன் பட்நாயக் ஆட்சியை இழக்கிறார்... ஒடிசாவில் பாஜக முன்னிலை!

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக்கின் பிஜூ ஜனதா தளம் கட்சி , சட்டப்பேரவை தேர்தலில் பின்னடவை சந்தித்து வருகிறது. 50 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளில் உள்ளன. நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜூ ஜனதா தளம் கட்சி 147 தொகுதிகளிலும், பாஜக 147 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 145 இடங்களிலும் போட்டியிட்டன.

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

இந்த தேர்தலில் 63.46 சதவீத ஓட்டுகள் பதிவாகின. தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணும் பணி இன்று காலையில் இருந்து நடைபெற்று வருகிறது. ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் கட்சி வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில், துவக்கத்தில் இருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது.

பாஜக கொடி
பாஜக கொடி

ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக 50 தொகுதிகளில் அதிக தொகுதிகளை பெற்று முன்னிலை வக்கிற்து.என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சி 35 தொகுதிகளில் மட்டும் முன்னிலை வகிக்கிறது. பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால்,ஐந்து முறை முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக் ஆட்சியை இழக்கும் சூழல் உருவாகி வருகிறது. காங்கிரஸ் கட்சி 7 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்ட பிஜூ ஜனதா தளம் கட்சி மொத்தமுள்ள 147 தொகுதிகளில் 112 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. பாஜக 23 தொகுதிகளையும், காங்கிரஸ் 9 தொகுதிகளில் வெற்றி பெற்றன.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in