டெல்லியில் 6 தொகுதிகளை அள்ளியது பாஜக... சாந்தினி சௌக்கில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை!

டெல்லியில் 6 தொகுதிகளை அள்ளியது பாஜக... சாந்தினி சௌக்கில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை!

டெல்லியில் மக்களவைத் தேர்தலில் பாஜக 6 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. சாந்தினி சௌக் தொகுதியில் மட்டும் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

மக்களவைத் தேர்தலில் 7 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக டெல்லியில் ஆறாவது கட்டமாக மே 25 அன்று தேர்தல் நடைபெற்றது. டெல்லியில் 1,47,18,119 வாக்காளர்களுடன் 57.67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து ஆம் ஆத்மி முதல் முறையாக இணைந்து் போட்டியிட்டது.

ஆம் ஆத்மி, காங்கிரஸ்
ஆம் ஆத்மி, காங்கிரஸ்

இதன்படி புதுடெல்லி, கிழக்கு டெல்லி, தெற்கு டெல்லி மற்றும் மேற்கு டெல்லி என நான்கு தொகுதிகளில் ஆம் ஆத்மி போட்டியிட்டது. டெல்லி, வடக்ிழக்கு டெல்லி மற்றும் சாந்தி சௌக் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி போட்டியிட்டது. ஆனால், பாஜக தனித்து 7 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இன்று காலையில் இருந்து வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

அதன்படி டெல்லியில் பாஜக 6 இடங்களிலும், காங்கிரஸ் 1 இடத்திலும் முன்னிலை பெற்றுள்ளன. வடகிழக்கு, வடமேற்கு மற்றும் கிழக்கு ஆகிய தொகுதிகளில் பல ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது.

பாஜக
பாஜக

சாந்தினி சௌக் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலையும் பெற்றுள்ளது.‘ இந்த தொகுதியில் பாஜகவின் பிரவீன் கண்டேல்வாலை எதிர்த்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய் பிரகாஷ் 4,293 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். மற்ற 6 இடங்களிலும் பாஜக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in