பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

2019 மக்களவை தேர்தலை விட அதிக வாக்குகளைப் பெற்ற பாஜக... தேர்தல் ஆணையம் பரபரப்பு தகவல்!

வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, 2019 மக்களவை தேர்தலை விட தற்போதைய மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில், குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். மற்ற 542 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இத்தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) 540 தொகுதிகளிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 328 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்த நாடும் எதிர்நோக்கும் மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) தரவுகளின்படி, 2019 மக்களவைத் தேர்தலை விட பாஜக அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது என்று வாக்கு எண்ணிக்கையின் ஆரம்ப இரண்டு மணிநேரம் தெரிவிக்கிறது.

தற்போதைய வாக்கு எண்ணிக்கையின் படி 22,199,717 அல்லது 40.43 சதவீத வாக்குகள் பாஜக பெற்றதாக தேர்தல் ஆணைய இணையதளம் காட்டுகிறது. அதேசமயம்,பாஜக 37.36 சதவீத வாக்குகளைப் பெற்றது, இது 1989 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு ஒரு அரசியல் கட்சியின் அதிகபட்ச வாக்குப் பங்காகும். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 303 இடங்களைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

x
காமதேனு
kamadenu.hindutamil.in