ஒடிசா தேர்தல் தோல்விக்கு வி.கே.பாண்டியன் காரணம் அல்ல... நவீன் பட்நாயக் அதிரடி!

நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்
நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்

வி.கே.பாண்டியன் தனது அரசியல் வாரிசு அல்ல எனவும், ஓடிசாவில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்ததற்கு அவர் காரணம் அல்ல எனவும் ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் உறுதியாக தெரிவித்துள்ளார்.

ஒடிசாவில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் பிஜு ஜனதா தளம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. சுமார் 24 ஆண்டுகளாக முதலமைச்சர் பதவி வகித்து வந்த நவீன் பட்நாயக் முதல் முறையாக தனது பதவியை இழந்துள்ளார். இதே போல் அந்த கட்சிக்கு மக்களவைத் தேர்தலிலும் கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரங்களின் போது தமிழகத்தைச் சேர்ந்தவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான வி.கே.பாண்டியன் குறித்து பாஜக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தது.

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

குறிப்பாக முதலமைச்சர் பதவி வகித்து வந்த நவீன் பட்நாயக்கின் உடல்நிலை மோசமடைந்து இருப்பதாகவும், அடுத்த வாரிசாக வி.கே.பாண்டியன் நியமிக்கப்படலாம் எனவும் பாஜக கடுமையாக விமர்சித்து இருந்தது. இந்த நிலையில் தேர்தல் தோல்வி குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் முன்னாள் முதலமைச்சர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் பேசி உள்ளார்.

நவீன் பட்நாயக்
நவீன் பட்நாயக்

அவர் பேசும் போது, ”வி.கே.பாண்டியன் எனது அரசியல் வாரிசு அல்ல என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி இருக்கிறேன். ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் தோல்வி அடைந்ததற்கு அவர் மட்டுமே காரணமும் அல்ல. இந்த தோல்வியை அடுத்து, வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை துரதிருஷ்டவசமானவை. அவர் கட்சியில் சேர்ந்து எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை.

வி.கே.பாண்டியன் ஒரு அதிகாரியாக கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றியுள்ளார். இரண்டு புயல்களால் ஒடிசா பாதிக்கப்பட்டபோதும், கோவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டபோதும் அவர் ஆற்றிய பணிகள் மிகச் சிறப்பானவை. இத்தகைய நல்ல பணிகளுக்குப் பிறகு, அவர் ஓய்வு பெற்று எங்கள் கட்சியில் சேர்ந்து பங்காற்றினார். பணிகளை நேர்மையாகச் செய்யக் கூடியவர் அவர். அதற்காக அவர் நினைவுகூரப்பட வேண்டும்.

மக்களுக்கு இயன்றவரை என்னாலான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி இருக்கிறேன். ஆனால் மக்கள் அளித்துள்ள இந்த தீர்ப்பு கவலைக்குரியதாக இருந்தாலும், அதனை முழு மனதுடன் ஏற்கிறேன். என்னால் முடிந்தவரை இந்த மாநில மக்களுக்கு சேவை ஆற்றுவேன்” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in