‘மோடி மீண்டும் முதலமைச்சராக வரட்டும்’ - பிரச்சாரக் களத்தை கலகலக்க வைத்த நிதிஷ் குமாரின் உளறல்

குஜராத் முதல்வராக மோடி
குஜராத் முதல்வராக மோடி
Updated on
2 min read

மோடி மீண்டும் முதலமைச்சராக வரட்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உளறிக்கொட்டியது, அனல் பரப்பி வரும் தேர்தல் பிரச்சாரக் களத்தை கலகலக்க வைத்துள்ளது.

‘குஜராத் மாநிலத்தின் வெற்றிகர முதல்வராக, அதனை தேசத்தின் முன்மாதிரி மாநிலமாக உயர்த்திக் காட்டியவர் நரேந்திர மோடி’ என்பதுதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அவர் அறிமுகம் செய்யப்பட்டபோது முக்கிய அடையாளமாக இருந்தது. மாநில முதல்வராக மட்டுமன்றி தேசத்தின் வெற்றிகர பிரதமராகவும் தன்னால் முடியும் என்பதை கடந்த 10 ஆண்டுகளில் மோடி சாதித்துக்காட்டி விட்டார்.

நிதிஷ் குமார்
நிதிஷ் குமார்

தற்போது மீண்டும் மோடி முதலமைச்சராக வேண்டும் என்றொரு குரல் எழுந்திருக்கிறது. அதுவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்தே அது எழுந்துள்ளது. உத்வேகமோ, உள்நோக்கமோ அன்றி உளறிக்கொட்டியதன் விளைவாக இது எழுந்துள்ளது.

பீகார் முதல்வரும் தேஜகூ அங்கத்தினருமான நிதிஷ் குமார், மக்களவைத் தேர்தல் பிரச்சார மேடையில் இவ்வாறு ’மோடி மீண்டும் முதல்வராக தேர்வாக வேண்டும்’ என்று நா தவறி பேசியுள்ளார்.

பீகாரின் பாட்னாவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நிதிஷ் குமார், “நாங்கள் இந்தியா முழுவதும் 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற விரும்புகிறோம். மேலும் நரேந்திர மோடி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டும் என விரும்புகிறோம். அப்போதுதான் இந்தியா வளர்ச்சி அடையும்; உடன் பீகாரும் வளரும்" என்றார். இதனையடுத்து பிரச்சார கூட்டத்தில் அமர்ந்திருந்த பொதுமக்கள், தேஜகூ கட்சியினர் மத்தியில் சலசலப்பு எழுந்தது.

பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்
பிரதமர் நரேந்திர மோடியுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்

மேடையில் வீற்றிருந்த சக அரசியல் தலைவர்கள் உடனடியாக நிதிஷ் குமாரின் தவறை சுட்டிக்காட்டியதும், அவர் சுதாரித்து திருத்திக்கொண்டார். ”நரேந்திர மோடி ஏற்கனவே பிரதமராக இருக்கிறார். அவர் அடுத்தக்கட்டமாக மீண்டும் பிரதமராவார் என்பதையே சொல்கிறேன். அதுதான் எனக்கு வேண்டும்” என அதே மேடையில் தனது தவறைத் திருத்திக்கொண்டார் நிதிஷ் குமார்.

இதையும் வாசிக்கலாமே...

135 கி.மீ. வேகம்... கரையை கடக்கும் போது சூறையாடிய 'ரெமல்' புயல்: மேற்கு வங்கத்தில் தொடரும் கனமழை!

முதல் முறையாக 50 டிகிரி செல்சியஸ் வெப்பம்... ராஜஸ்தான் மக்கள் அதிர்ச்சி!

திருப்பதி அருகே பயங்கர விபத்து... சாலைத் தடுப்பில் கார் மோதி 4 பேர் பலி!

சோகம்... சரத்குமார் நடித்த 'மாயி' பட இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

இடைக்கால ஜாமீனை 7 நாள்கள் நீட்டிக்க வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மனு

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in