மோடி பதவியேற்பு விழா: இந்தியா வந்தார் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு
வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு இந்திய அரசு சார்பில் வரவேற்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களின் வருகை துவங்கியுள்ளது. பிரம்மாண்ட விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இன்று டெல்லி வந்தடைந்தார்.

மக்களவைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

மேலும், தொடர்ச்சியாக 3வது முறையாக நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்று, முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை நேர் செய்ய உள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நாளை இரவு 7.15 மணிக்கு நடைபெறுகிறது. இந்த வரலாற்று சிறப்புமிக்க விழாவில் பங்கேற்க உலக நாடுகளின் பல்வேறு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியாவின் அண்டை நாடான வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை, பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை அழைப்பு விடுத்திருந்தார்.

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்க வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தார். அவருக்கு இந்திய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்தியாவும் பங்களாதேஷும் வரலாறு, கலாச்சாரம் மற்றும் புவியியல் ரீதியாக பல்லாண்டு பன்முக உறவை கொண்டுள்ளன. இதேபோல், அருகாமை நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய நாடுகளின் தலைவர்கள், மாகாண தலைவர்களுக்கும், பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவின் 'அண்டை நாடு முதலில்' என்ற கொள்கையின் சிறந்த சான்றாகும்.

பதவியேற்பு விழாவுக்கு தயாராகி வரும் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகம்
பதவியேற்பு விழாவுக்கு தயாராகி வரும் குடியரசுத் தலைவர் மாளிகை வளாகம்

வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸு, செஷெல்ஸ் துணை அதிபர் அகமது அபிஃப், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்னாத், நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே ஆகியோர் விழாவில் பங்கேற்க அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in