ஒரே விமானத்தில் டெல்லிக்கு பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்; அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

டெல்லிக்கு ஒரே விமானத்தில் பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்
டெல்லிக்கு ஒரே விமானத்தில் பயணித்த நிதிஷ்குமார், தேஜஸ்வி யாதவ்

மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் எதிர் எதிர் கூட்டணியில் உள்ள பீகாரின் நிதிஷ்குமாரும், தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் டெல்லிக்கு பயணம் செய்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலில் மத்தியில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சி அமைக்க பாஜக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியும் 233 இடங்களை கைப்பற்றியுள்ள நிலையில் எதிர் அணியில் உள்ள தலைவர்களை தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளுமா என்பது குறித்து இன்று கூடி ஆலோசிக்க உள்ளது.

குறிப்பாக மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும், பீகாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார், தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு ஆகியோரின் ஆதரவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க சாத்தியம் இல்லை என்ற நிலை உள்ளது.

இச்சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணி, இந்தியா கூட்டணி என நாட்டின் அனைத்து முக்கிய அரசியல் தலைவர்களும் டெல்லியில் முகாமிட்டுள்ளனர்.

இச்சூழலில் பாஜக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரும், இந்தியா கூட்டணியில் உள்ள தேஜஸ்வி யாதவும் இன்று டெல்லிக்கு ஒரே விமானத்தில் டெல்லிக்குப் புறப்பட்டு சென்றனர்.

இதன் காரணமாக அவர்களிடையே பேச்சு ஏதும் எழுந்து அணி மாறும் நிலை உருவாகுமா என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் முடிவு
மக்களவைத் தேர்தல் முடிவு

இதற்கிடையே பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெறும் என பாஜக கட்சி வட்டார தகவல்கள் வெளியாகி உள்ளன.

மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால் டெல்லி மட்டுமின்றி இந்தியா முழுவதுமே அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in