பாஜகவின் தோல்விக்கு அண்ணாமலைக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார் - எஸ்.வி.சேகர் கோபம்!

எஸ்.வி.சேகர்
எஸ்.வி.சேகர்

அண்ணாமலை தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார் என்று நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “அண்ணாமலை கஷ்டம் அவரால் வந்தது. கடப்பாரையை எடுத்து அவரே குத்திக்கொண்டார். அதற்கெல்லாம் அவருக்கு தண்டனை கிடைத்தால்தான் திருந்துவார். அவர் தமிழ்நாட்டில் பாஜகவை 40க்கு பூஜ்ஜியம் என்ற நிலைக்கு கொண்டு வந்து நிறுத்திவிட்டார். அதில் 13 இடங்களில் டெபாசிட் போய்விட்டது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோல்வி தான்.

இதுகுறித்து 6 மாதங்கள் முன்பே நான் கூறினேன், தமிழக பாஜக அண்ணாமலை தலைமையில் ஒரு பூஜ்ஜியம் தான் என்று. அது நிரூபணமாகியுள்ளது. அதே சமயத்தில் மோடி அவர்கள் 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக வருவார் என்றேன், அதுவும் நடந்திருக்கிறது.

அண்ணாமலை
அண்ணாமலை

தமிழக பாஜக, எப்போது அண்ணாமலையின் யோசனையைக் கேட்டு அதிமுகவின் கூட்டணியை முறித்துக்கொண்டதோ, அன்றே தமிழக பாஜகவின் எதிர்காலம் முடிந்துவிட்டது. இரண்டு முறை இந்தியாவை ஆண்ட தேசிய கட்சிக்கு தன்னால் ஒரு சீட் கொடுக்கக் கூட உபயோகம் இல்லாமல் மாநில தலைவர் உள்ளார் என்றால், அது வெட்கப்பட வேண்டிய விஷயம்.

பாஜக 14 சதவிகிதம் வாக்கு என்பது வளர்ச்சியில்லை, அசிங்கம். 13 இடங்களில் பாஜக டெபாசிட்டே இல்லை. 14 சதவிகிதம் என்பது பாஜக கூட்டணியால் வந்த வாக்குதான். எனவே தோல்வியை ஒப்புக்கொள்ள தான் வேண்டும். இதை சரி செய்தால் தான் திருந்த வாய்ப்பு உள்ளது” என்று அவர் தெரிவித்தார்

எஸ்வி சேகர்
எஸ்வி சேகர்

மேலும், “கலைஞரை நூற்றாண்டு விழா முடிந்து, அந்த கொண்டாட்டத்தில் அவரது 101வது பிறந்தநாளை பெரிய அளவில் திமுக கொண்டாடக் கூடிய வகையில் திமுகவின் வெற்றி இருக்கும் என்று நான் கூறினேன். அதுபோல் தான் இந்த முடிவு வந்திருக்கிறது.

அதற்கு முக்கிய காரணம், அடிப்படையான கூட்டணி என்ற விஷயம் தான். கூட்டணியை கலையாமல் ஸ்டாலின் அவர்கள் பார்த்துக் கொண்டார் மற்றும் அரசின் சாதனைகள் மூலம் முழு வெற்றி பெற்றார்கள்'' என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in