தகுதி இல்லாதவர் தலைவராக நீடிப்பது பாஜகவுக்கு நல்லதல்ல: அண்ணாமலைக்கு கனிமொழி பதிலடி!

திமுக எம்பி- கனிமொழி
திமுக எம்பி- கனிமொழி

தகுதி இல்லாதவர் தலைவராக நீடிப்பது பாஜகவுக்கு நல்லதல்ல என பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு திமுக எம்பி- கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி 5,40,729 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

அப்போது பேசிய அவர், “மீண்டும் தூத்துக்குடியில் போட்டியிட வாய்ப்பளித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எனது வெற்றிக்காக உழைத்த, பிரச்சாரம் செய்த அனைத்து தலைவர்களுக்கும், மீண்டும் என் மீது நம்பிக்கை வைத்த தூத்துக்குடி மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை. இங்கு தாமரை மலராது என்பதை மிக தெளிவாக தமிழக மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். ஆட்சி மாற்றம் நடக்குமா என்பது குறித்து இன்று மாலை இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆலோசிக்க உள்ளனர். அங்கே தான் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும்.

செய்தியாளர்களை சந்தித்த எம்பி- கனிமொழி
செய்தியாளர்களை சந்தித்த எம்பி- கனிமொழி

அண்ணாமலை, அடிக்கடி கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று கேள்வி கேட்பார். இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி என்ற தகுதியில் நான் அவருக்கு பதில் சொல்கிறேன். அந்த தகுதி கூட இல்லாத ஒருவர் பாஜக தலைவராக இங்கே நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லதல்ல” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in