ஆந்திர சட்டப் பேரவைத் தேர்தல்: தெலுங்கு தேசம் கட்சி முன்னிலை

தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு

ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம், பாஜக, ஜனசேனா கூட்டணி முன்னிலை வகிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலும் இணைத்து நடத்தப்பட்டது. அங்கு மொத்தம் உள்ள 25 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 175 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் கடந்த மே 13ம் தேதி தேர்தல் நடைபெற்றது.

இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், தெலு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை படுதோல்வி அடையச் செய்து ஆட்சியைப் பிடித்தது.

ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம்

இந்த முறை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தனி அணியாகவும், தெலங்கு தேசம், பாஜக, ஜனசேனா தனி அணியாகவும் போட்டியிட்டுள்ளன.

இது தவிர இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகியவை இணைந்து ஓர் அணியாக களம் கண்டுள்ளன.

ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஷர்மிளா
ஜெகன் மோகன் ரெட்டி, ஒய்.எஸ்.ஷர்மிளா

முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி போட்டியிடும் புலிவெந்தலா தொகுதி மற்றும் சந்திரபாபு நாயுடு போட்டியிடும் குப்பம் தொகுதியில் மக்களின் எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

ஆந்திர மாநில சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றி முன்னணி நிலவரத்தில் தெலுங்குதேசம் - பாஜக – ஜனசேனா கூட்டணி முன்னிலை வகிப்பதாக அம்மநில தேர்தல் வெற்றி நிலவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in