மும்பையில் ரூ.14 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கிய ‘அனிமல்’ பட நடிகை!

'அனிமல்’ படத்தில் நடிகை திரிப்தி டிம்ரி
'அனிமல்’ படத்தில் நடிகை திரிப்தி டிம்ரி

'அனிமல்’ படம் தந்த உற்சாகத்தால் நடிகை திரிப்தி டிம்ரி மும்பையில் சுமார் ரூ. 14 கோடிக்கு சொகுசு பங்களா வாங்கி இருக்கிறார்.

’அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய படம் ‘அனிமல்’. ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டப் பலர் நடித்திருந்த இந்தப் படம் அதீத வன்முறை, ஆணாதிக்க மனப்பான்மை ஆகியவற்றிற்காக கடும் விமர்சனங்களை இணைய வெளியில் எதிர்கொண்டது. பல பிரபலங்களே இந்தப் படத்திற்கு எதிராகப் பேசினர்.

நடிகை திரிப்தி டிம்ரி
நடிகை திரிப்தி டிம்ரி

இருந்தாலும் அதை எல்லாம் கண்டு கொள்ளாது, படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்தப் படத்தில் இரண்டாவது நாயகியாக திரிப்தி டிம்ரி நடித்திருந்தார். இந்தப் படம் மூலம் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கிடைத்தனர்.

இந்த உற்சாகத்தில், மும்பையின் பாந்த்ரா மேற்குப் பகுதியில் உள்ள கார்ட்டர் சாலையில் இரண்டு மாடி சொகுசு பங்களாவை வாங்கியுள்ளார். இந்த சொகுசு பங்களாவின் சொத்து மதிப்பு ரூ.14 கோடி என சொல்லப்படுகிறது.

நடிகை திரிப்தி டிம்ரி
நடிகை திரிப்தி டிம்ரி

பரிவர்த்தனைக்கு 70 லட்சம் ரூபாய் முத்திரை கட்டணம் செலுத்தப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. பங்களாவின் மொத்த பரப்பளவு 2,226 சதுர அடி நிலப்பரப்பு மற்றும் 2,194 சதுர அடி பரப்பளவை உள்ளடக்கியது. இதற்காக ஜூன் 3, 2024 அன்று பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in