அதிமுக அதிர்ச்சி... கூட்டணி கட்சிகள் மட்டுமே முன்னிலை; கடும் பின்னடைவில் அதிமுக வேட்பாளர்கள்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தில், தமிழகத்தை பொறுத்தளவில் அதிமுக கடும் பின்னடவை சந்தித்துள்ளது.

மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பணிகள் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. தேசியளவில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. மாநில அளவில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. தேசிய அளவில் பாஜக முன்னிலை வகித்தபோதும் அதற்கு போட்டியாக இந்தியா கூட்டணியும் முன்னிலை வகித்து வருகிறது.

விஜய பிரபாகரன்
விஜய பிரபாகரன்

ஆனால் தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கடும் பின்னடவை சந்தித்துள்ளது. தமிழகத்தை பொறுத்தளவில் நடப்பு மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியே அதிக இடங்களில் வெல்லும் என்றே கருத்துக்கணிப்புகள் வெளியாகி இருந்தபோதும், அதிமுகவுக்கான ஓரிரு வெற்றிகளை கருத்துக்கணிப்புகள் உறுதி செய்திருந்தன. மாறாக தனிக்கட்சியாக அதிமுக பின்னடைவை சந்தித்துள்ளது.

10 மணி நிலவரங்களின்படி, அதிமுக கூட்டணியின் 2 கட்சிகள் முன்னிலை வகித்தன. ஆனால் அவை இரண்டுமே அதிமுக நேரடியாக களமிறங்கிய தொகுதிகள் அல்ல. அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தேமுதிக விருதுநகர் தொகுதியிலும், தென்காசியில் புதிய தமிழகமும் இந்த வகையில் முன்னிலை வகித்தன. விருதுநகரில் தேமுதிகவின் நட்சத்திர வேட்பாளரான விஜய பிரபாகரன் முன்னிலை வகிக்க, தென்காசியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவரான டாக்டர் கிருஷ்ணசாமி முன்னிலை வகிக்கிறார்.

டாக்டர் கிருஷ்ணசாமி
டாக்டர் கிருஷ்ணசாமி

அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்தபோதும், விருதுநகர் மற்றும் தென்காசி தொகுதிகளின் வேட்பாளர்கள் தனிப்பட்ட செல்வாக்கில் முன்னிலை வகிப்பவர்கள். விஜயகாந்த் மறைவு காரணமாக அனுதாப வாக்குகள் அவரது மகனுக்கு விருதுநகரில் கைகொடுத்திருக்கின்றன. தென்காசியில் தனிப்பட்ட வகையில் செல்வாக்கு கொண்ட கிருஷ்ணசாமியும் இவ்வாறு தடம் பதித்து வருகிறார். இந்த இரு கூட்டணி வேட்பாளர்களுக்கு அப்பால், அதிமுக கூட்டணியில் அதிமுக வேட்பாளர்கள் முன்னிலை வகிக்க தடுமாறி வருகிறார்கள். இது அதிமுகவுக்கு மட்டுமன்றி அதன் நடப்பு பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமிக்கும் இக்கட்டை ஏற்படுத்த காத்திருக்கின்றன. இத்தகைய நடப்பு சூழல் அதிமுகவினருக்கு அதிர்ச்சி தந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in