விழுந்த வேகத்தில் எழுந்த அதானி குழுமத்தின் பங்குகள்... மீண்டும் மோடி ஆட்சி உறுதியானதில் உற்சாகம்!

அதானி - மோடி
அதானி - மோடி

பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லை என்றதும் நேற்று பெரிதாய் அடிவாங்கிய அதானி குழுமத்தின் பங்குகள், மீண்டும் மோடி ஆட்சி உறுதியானதும் இன்று அதே வேகத்தில் எழுச்சி கண்டுள்ளன.

மூன்றாம் முறையும் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியே அமையும் என்ற எதிர்பார்ப்புகள் பரவலாக இருந்தன. அதற்கேற்ப பாஜகவின் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு, எதிர்க்கட்சியினரின் அவநம்பிக்கைகளும் உரம் சேர்த்தன. முத்தாய்ப்பாக கருத்துக்கணிப்புகளும் பாஜகவுக்கே பெரும்பான்மை என்றன. ஆளும்கட்சியே மீண்டும் பதவியேற்கும் என்ற நம்பிக்கையால் பங்குச்சந்தைகள் உச்சம் கண்டு வந்தன.

கௌதம் அதானி
கௌதம் அதானி

அதிலும் ஆள்வோருக்கு நெருக்கமானது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினரால் குற்றச்சாட்டுக்கு ஆளான அதானி குழுமத்தின் பங்குகள் வாழ்நாள் உச்சத்தை தொட்டிருந்தன. ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான நேற்று, பாஜகவுக்கு பெரும்பான்மை இல்லை என்ற தகவல் வெளியானதும், பங்குச்சந்தை தலைக்குப்புற விழுந்தது. அதுவரை சந்தையை இழுத்துக்கொண்டு முன்னேறிய அதானி குழுமத்தின் பங்குகளே இம்முறை சரிவுக்கும் ஆளானது.

கொரோனா காலத்திய பெரும் சரிவு மற்றும் அதையொட்டிய பல லட்சம் கோடி இழப்புகளுக்கு முதலீட்டாளர்கள் ஆளானர். ஆனால் ஒரே இரவில் நிலைமை மீண்டும் திரும்பியது, பங்குச்சந்தையின் இயல்பே இதுதான் என்றபோதும், அதனை அதானி குழுமத்தின் பங்குகள் இயக்கியது கவனம் பெற்றது. பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இல்லாதபோதும், அதன் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சிக்கு முடிவானது. இதனையடுத்து விழுந்த வேகத்தில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுந்தன.

மீண்டு எழுந்த பங்குச்சந்தை
மீண்டு எழுந்த பங்குச்சந்தை

பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் அதானி குழுமத்தின் 10ல் 9 பங்குகள் இன்று இவ்வாறு வேகமாக மீண்டு முன்னேறின. குறிப்பாக அதானி க்ரீன் எனர்ஜி சுமார் 11 சதவீதம் வரை எகிறியது. அதானி போர்ட்ஸ் 9 சதவீதம், அம்புஜா சிமெண்ட்ஸ் 7.5 சதவீதம், அதானி என்டர்பிரைசஸ் 6 சதவீதம் என அவை உயர்வு கண்டது குறிப்பிடத்தக்கது. மோடி தலைமையிலான பாஜக கூட்டணி ஆட்சி பொறுப்பேற்றதும், அதானி குழுமத்தின் பங்குகள் புதிய வரலாறு படைக்கும் என்றும் நம்பலாம்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in