காதலுக்காக ரொம்ப யோசித்தேன்... நடிகை தாப்ஸி!

நடிகை தாப்ஸி
நடிகை தாப்ஸி

”காதலுக்காக நிறைய காலம் எடுத்து யோசித்தேன். என் காதல் நீடிக்குமா என்றெல்லாம் நினைத்திருக்கிறேன்” என நடிகை தாப்ஸி கூறியுள்ளார்.

’கேம் சேஞ்சர்’, ‘ஆடுகளம்’ போன்ற படங்கள் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்குப் பரிச்சியமானவர் நடிகை தாப்ஸி. தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வருகிறது. தனது நீண்ட நாள் காதலரான மத்யாஸ் போவை கடந்த மார்ச் 23 அன்று உதய்ப்பூரில் திருமணம் செய்துள்ளார். நண்பர்கள், உறவினர்கள் என நெருங்கியவர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

காதலருடன் தாப்ஸி
காதலருடன் தாப்ஸி

திருமணம் தனது தனிப்பட்ட விஷயம் என்றும் இதை வைத்து தன்னை மதிப்பீடு செய்வதை தவிர்க்கவுமே யாரையும் பெரிதாக கூப்பிடாமல் திருமணம் செய்தேன் என தாப்ஸி கூறியிருந்தார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் தனது காதல் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை தாப்ஸி. “சினிமாவில் வருவது போல முதல் பார்வையிலேயே எங்களுக்குள் காதல் வரவில்லை. அவரை சந்தித்த போது எனக்கு அவர் மீது பெரிய மரியாதை இருந்தது. அதன் காரணமாக, அடிக்கடி சந்தித்து பேசினோம்.

நடிகை தாப்ஸி திருமணம்
நடிகை தாப்ஸி திருமணம்

பின்பு, என்னை அறியாமலேயே அவரை நான் காதலிக்க ஆரம்பித்து விட்டேன். இருந்தாலும் எனக்கு அந்தக் காதல் நீடிக்குமா, நடைமுறைக்கு ஒத்து வருமா எனப் பல குழப்பங்கள் இருந்தது. இறுதியில் எனக்கானவரை கண்டுபிடித்து விட்டேன் என உணர்ந்த பின்பு தான் என் காதலை உறுதி செய்தேன்” என்று பேசியுள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in