காதலில் விழுந்த நடிகை சுனைனா? - வெளியிட்ட புதிரான பதிவு!

சுனைனா
சுனைனா

நடிகை சுனைனா தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஒருவருடன் கைக்கோத்து இருக்கும்படியான புகைப்படத்தைப் பகிர்ந்து ‘லாக்ட்’ எனக் கேப்ஷனும் கொடுத்துள்ளார்.

சினிமா பிரபலங்கள் தங்களுடைய தனிப்பட்ட விஷயங்களை சமூகவலைதளங்களில் பகிரும்போது இது ‘நிஜமா அல்லது ஏதும் புரோமோஷனா?’ என்ற குழப்பம் பல சமயங்களில் ரசிகர்களுக்கு ஏற்படும். அந்த அளவுக்கு வெளிப்படையாகச் சொல்லாமல், புதிராக அவர்கள் பதிவிடுவார்கள். அப்படியான ஒரு புதிரான பதிவைத் தான் நடிகை சுனைனா தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

நடிகை சுனைனாவின் பதிவு
நடிகை சுனைனாவின் பதிவு

’காதலில் விழுந்தேன்’, 'சில்லுக்கருப்பட்டி’, ‘ரெஜினா’ உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் நடித்தவர் சுனைனா. பிளாக் அண்ட் வொயிட் கலரில் ஒரு நபரின் கையை பிடித்தபடியான புகைப்படத்தைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படத்திற்கு ‘லாக்ட்’ என அர்த்தம் தரும் எமோஜியையும் பகிர்ந்துள்ளார் சுனைனா.

இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் ’நிஜ வாழ்க்கையில் காதலில் விழுந்துவிட்டாரா சுனைனா?’ எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர். இன்னும் சிலர் ஏதும் பட புரோமோஷனா?’ என்றும் கேட்கின்றனர். இதுகுறித்து விரைவில், சுனைனா தெளிவுப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in