நம்பவே முடியவில்லை... ஆச்சரியத்தில் நடிகை ஜோதிகா!

நடிகை ஜோதிகா
நடிகை ஜோதிகா

”பாலிவுட்டில் 25 வருடங்கள் கழித்து நடித்திருக்கிறேன். ரசிகர்கள் என்னை மீண்டும் ஏற்றுக் கொண்டு வரவேற்பு கொடுத்திருப்பதை என்னால் நம்பவே முடியவில்லை” என்று ஆச்சரியத்தைப் பகிர்ந்திருக்கிறார் நடிகை ஜோதிகா.

கோலிவுட்டின் நட்சத்திர ஜோடி ஜோதிகா- சூர்யா இருவரும் தங்கள் பிள்ளைகளின் படிப்பிற்காக தற்போது மும்பையில் செட்டில் ஆகியுள்ளனர். மும்பையில் இருப்பதால் கூடவே அங்கும் படங்களில் நடித்து வருகிறார் ஜோதிகா. அஜய் தேவ்கன், மாதவனுடன் இணைந்து இவர் பாலிவுட்டில் கம்பேக் கொடுத்த ‘சைத்தான்’ ஹிட்டானது.

ஜோதிகா, அஜய்தேவ்கன், மாதவன்
ஜோதிகா, அஜய்தேவ்கன், மாதவன்

இந்தப் படத்தை அடுத்து ‘ஸ்ரீகாந்த்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் இவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்தது. இந்தப் படத்தை அடுத்து, ‘டப்பா கார்டல்’ என்ற வெப் சீரிஸில் நடிக்கிறார் ஜோதிகா. பாலிவுட்டில் இவரது கம்பேக் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர், “25 வருடங்கள் கழித்து என்னுடைய கம்பேக்கில் ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவு எனக்கு ஆச்சரியமாக உள்ளது. நம்பவே முடியவில்லை. வடக்கு, தெற்கு என்ற பாகுபாடு இல்லாமல் நல்ல கதை, கதாபாத்திரம் என்றால் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது நிரூபணம் ஆகிவிட்டது.

தெற்கைப் போலவே, பாலிவுட்டிலும் இன்னும் நல்ல கதாபாத்திரங்கள் நடிக்கக் காத்திருக்கிறேன். குழந்தைகளுடைய படிப்பிற்காக தான் மும்பை வந்தோம். பாலிவுட்டிலும் மீண்டும் படங்கள் நடிக்க ஆரம்பித்தேன். இந்த கமிட்மெண்ட் எல்லாம் முடிந்த பிறகு மீண்டும் சென்னை வந்து விடுவேன்” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in