பாப்பா வரப்போகுது... நடிகை அமலாபால் ஹேப்பி டான்ஸ்!

நடிகை அமலாபால்
நடிகை அமலாபால்

குழந்தை பிறக்க இருக்கும் சந்தோஷத்தில் நடிகை அமலாபால் ஆடியுள்ள கியூட் நடனம் இணைய வாசிகளைக் கவர்ந்துள்ளது.

நடிகை அமலாபாலுக்கு இன்னும் சில தினங்களில் குழந்தைப் பிறக்க இருக்கிறது. இதைக் குறிக்கும் வகையில் அவரது கணவர் ஜெகத் தேசாய் அமலாபால் புகைப்படத்துடன் ‘கவுண்டவுன் பிகின்ஸ்’ எனச் சொல்லி இருந்தார். இப்போது அமலாபாலும் ’'பேபி கம் டவுன்...பேபி கம் டவுன்’ பாடல் பாட வேண்டிய நேரம் வந்துவிட்டது’ என்ற கேப்ஷனோடு கியூட்டான நடனம் ஆடியுள்ளார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமலாபாலுக்குத் திருமணம் நடந்தது. திருமணம் ஆன சில மாதத்திலேயே தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்தார். கர்ப்பமாக இருந்தாலும் தொடர்ந்து பட புரோமோஷன், விளம்பரங்கள், ஃபேஷன் ஷோ என பிஸியாகவே இருந்தார்.

அமலாபால் வளைகாப்பு
அமலாபால் வளைகாப்பு

இடையில் இவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துவிட்டது என்றெல்லாம் செய்திகள் வந்தது. இப்போது தன் குழந்தையை எதிர்பார்த்து இருப்பதாகக் கூறியிருக்கிறார் அமலாபால். அவரது பேபி பம்ப் பார்த்த ரசிகர்கள் நிச்சயம் பெண் குழந்தைதான் எனக் கூறி வாழ்த்துச் சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in