அர்ஜூன் வீட்டில் களைக்கட்டிய கல்யாண கொண்டாட்டம்... கலக்கல் புகைப்படங்கள்!

ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி
ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி

நடிகர் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யாவின் திருமணக் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கி இருக்கிறது. இந்தப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் ராமையாவின் மகன் உம்பாதிக்கும் நாளை மறுநாள் சென்னையில் திருமணம் நடைபெற இருக்கிறது. ஜூன் 14ம் தேதி சென்னை, லீலா பேலஸில் திருமண வரவேற்பு நடைபெற இருக்கிறது. இன்று ப்ரீ வெட்டிங் கொண்டாட்டமாக ஹல்தி நிகழ்வு அர்ஜூன் இல்லத்தில் நடந்திருக்கிறது.

ஐஸ்வர்யா அர்ஜூன்
ஐஸ்வர்யா அர்ஜூன்

எளிமையான மஞ்சள் நிற உடை அணிந்து கையில் மெஹந்தியுடன் சந்தோஷமாக நிகழ்வில் பங்கேற்று இருக்கிறார் ஐஸ்வர்யா. அர்ஜூன், தம்பி ராமையா மற்றும் நண்பர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஐஸ்வர்யா அர்ஜூன்
ஐஸ்வர்யா அர்ஜூன்

அர்ஜூன் தொகுத்து வழங்கிய ‘சர்வைவர்’ நிகழ்ச்சி மூலம் ஐஸ்வர்யாவுக்கு அறிமுகமானவர் உமாபதி. நிகழ்ச்சியில் உமாபதியின் நற்குணம் அர்ஜூனுக்குப் பிடித்துப் போக தனது வீட்டு மாப்பிளையாக பச்சைக் கொடி காட்டினார். இன்னும் ஒரு சில நாட்களில் கணவன் - மனைவியாகப் போகும் இந்த ஜோடிக்கும் ரசிகர்கள் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கோலிவுட்டில் அடுத்தடுத்து கல்யாணக் கொண்டாட்டம்... திருமணத்திற்கு தயாராகும் பிரபலங்கள்!

மோடி மீண்டும் பிரதமர்... விரலை வெட்டி காளி கோயிலில் காணிக்கை செலுத்திய பாஜக தொண்டர்!

நடுரோட்டில் தலைக்குப்புற கவிழ்ந்த கார்... பதைபதைக்க வைக்கும் வீடியோ!

அதிர்ச்சி... 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளியிடம் ரூ.40 கோடி ஜிஎஸ்டி கேட்டு நோட்டீஸ்!

காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் அதிக இடம் கிடைத்தது கவலையளிக்கிறது: தமிழிசை சவுந்தர்ராஜன் பேட்டி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in