அடுத்த பட இயக்குநருக்கு பிரியாணி ட்ரீட் வைத்து அசத்திய சிம்பு!

சிலம்பரசன்
சிலம்பரசன்

நடிகர் சிம்பு இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவிற்கு பிரியாணி ட்ரீட் வைத்து அசத்தியிருக்கிறார். இந்தப் புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் பிறந்தநாள் வரும் ஜூன் 6ம் தேதி கொண்டாடப்பட இருக்கும் நிலையில், அவருக்கும் அவரது உதவியாளர்களுக்கும் நடிகர் சிம்பு பிரியாணி ட்ரீட் வைத்து அசத்தியிருக்கிறார். ‘ஓ மை கடவுளே’ படம் மூலம் சினிமாவில் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து.

அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்
அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன்

இப்போது ‘லவ் டுடே’ புகழ் அஸ்வத் மாரிமுத்துவை வைத்து ‘டிராகன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் குறித்தான செய்தி வந்ததும், பலரும் சிம்புவுக்காக சொன்ன கதையில்தான் பிரதீப் நடிக்கிறார் என்று தகவல் பரப்பினர். ஆனால், அதுகுறித்து மறுத்த அஸ்வத் ‘சிம்புவுக்காக சொன்ன கதை வேறு. பிரதீப் நடிக்கும் கதை வேறு’ என்று சொன்னார்.

இதனால், அஸ்வத் கதையில் அடுத்து சிம்பு நடிப்பார் என ரசிகர்கள் காத்திருந்தனர். இதனை உறுதிப்படுத்தும் விதமாக சிம்பு, அஸ்வத் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து அசத்தி இருக்கிறார். இந்தப் புகைப்படத்தையும் அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்து, ‘சிம்பு சார், நீங்க ரொம்ப ஸ்வீட்! என்னுடைய பிறந்தநாளுக்காக எனக்கும் என் டீமுக்கும் பிரியாணி அனுப்பியதற்கு நன்றி’ எனக் கூறியிருக்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in