ரஜினியுடன் என்ன தான் பிரச்சினை?! மனம் திறந்த சத்யராஜ்!

ரஜினிகாந்த்- சத்யராஜ்
ரஜினிகாந்த்- சத்யராஜ்

"ரஜினிகாந்துடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” என நடிகர் சத்யராஜ் மனம் திறந்து பேசியுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 171வது படத்தில் நடிக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ‘கூலி’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 10ம் தேதியில் இருந்து தொடங்க இருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினியுடன் இணைந்து நடிகர் சத்யராஜூம் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

சத்யராஜ்
சத்யராஜ்

இது குறித்து முன்பு சத்யராஜிடம் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றில் கேட்டபோது, “படக்குழு தான் அதை உறுதியாக சொல்லும்” என்றார்.

‘மிஸ்டர் பாரத்’ படத்திற்குப் பிறகு ரஜினியுடன் இணைந்து சத்யராஜ் எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களில் ரஜினியுடன் இணைந்து நடிப்பதற்காக அவரை அணுகிய போதும் அவர் மறுத்து விட்டார் என்று சொல்லப்பட்டது.

இதனால், ரஜினிக்கும் சத்யராஜூக்கும் பஞ்சாயத்து என்றெல்லாம் செய்திகள் கிளம்பியது. இது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “யார் இது போல புரளியைக் கிளப்புகிறார்கள் என்று தெரியவில்லை. ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. ‘மிஸ்டர் பாரத்’ படத்தில் எனக்கு வலுவான கதாபாத்திரம் அமைந்தது.

 ‘மிஸ்டர் பாரத்’
‘மிஸ்டர் பாரத்’

அதற்கு பிறகு ரஜினியுடன் சேர்ந்து நடிக்கிறேன் என்றால் அதையும் தாண்டியதாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்களில் அப்படியான வலுவான கதாபாத்திரம் எனக்கு வராததால் தான் வாய்ப்பை மறுத்தேன். மற்றபடி, எந்தப் பிரச்சினையும் இல்லை” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in