இன்னும் அதுபத்தி முடிவெடுக்கல... நடிகர் ரஜினிகாந்த் மோடி பற்றி பேச்சு!

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பியுள்ளார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

கடந்த ஒருவார காலமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம் சென்றிருந்தார். இந்த ஆன்மீக பயணத்தை முடித்துவிட்டு அவர் இன்று சென்னை திரும்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது,“பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள என்னுடைய அருமை நண்பர், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு வாழ்த்துக்கள். மற்றொரு நண்பர் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளார். அவருக்கும் என்னுடைய பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்டிஏ ஆட்சி அமைக்க இருக்கிறது. மூன்றாவது முறையாக மோடி அவர்கள் பிரதமராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். டெல்லியில் பதவி ஏற்பு நிகழ்வுக்கு செல்வதற்கு குறித்து முடிவெடுக்கவில்லை.

வருடாவருடம் செல்வது போல ரிஷிகேஷ், பத்ரிநாத் உள்ளிட்ட இடங்களுக்கு சென்றேன். அருமையாக இருந்தது. ஒரு முறையும் ஒரு புது அனுபவம் கிடைக்கிறது” என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி: ஜவஹர்லால் நேருவின் சாதனையை சமன் செய்யும் நரேந்திர மோடி!

ஜெகன் மோகன் ரெட்டி சாதனையை முறியடித்த ரகுவீர் ரெட்டி... தேர்தல் திருவிழா சுவாரசியம்!

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் டெபாசிட் காலி... சீமான் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் கனிமொழி சாதனை... எதிர்த்து போட்டியிட்ட 27 பேரின் டெபாசிட் காலி!

எக்சிட் ஃபோல் இப்படியாகி போச்சோ... கணித்துக் கொடுத்தவர் கண்ணீர் விட்டுக் கதறிய வீடியோ வைரல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in