கார் விபத்தில் ‘காலா’ பட நடிகரின் மைத்துனர் பலி... படுகாயங்களுடன் சகோதரி மருத்துவமனையில் அனுமதி!

கார் விபத்தில் ‘காலா’ பட நடிகரின் மைத்துனர் பலி... படுகாயங்களுடன் சகோதரி மருத்துவமனையில் அனுமதி!
Updated on
1 min read

பிரபல இந்தி நடிகர் பங்கஜ் திரிபாதியின் மைத்துனர் ராஜேஷ் திவாரி நேற்று நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நடிகர் பங்கஜ் திரிபாதியின் சகோதரி சரிதா திவாரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் பங்கஜ் திரிபாதியின் சகோதரி சரிதா திவாரி மற்றும் அவரது கணவர் ராஜேஷ் திவாரி ஆகியோர் நேற்று ஜார்கண்ட் மாநிலம் நிர்சாவில் உள்ள கிராண்ட் டிரங்க் சாலையில் சென்று கொண்டிருந்த போது, இவர்களது கார் நிர்சா மார்க்கெட் சௌக் அருகே நெடுஞ்சாலையின் டிவைடரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரவி வருகிறது.

இந்த விபத்தில் காரில் இருந்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார், அவர்களை மீட்டு தன்பாத்தில் உள்ள ஷாகித் நிர்மல் மகதோ மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மருத்துவமனை கொண்டு செல்லும் வழியிலேயே ராஜேஷ் திவாரி பரிதாபமாக உயிரிழந்தார். திரிபாதியின் சகோதரி படுகாயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பங்கஜின் சகோதரி சரிதா, தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் வாசிக்கலாமே...


சித்ரா பௌர்ணமி கோலாகலம்... திருவண்ணாமலையில் 5000 போலீஸார் பாதுகாப்பு... 2500 சிறப்பு பேருந்துகள்!

மீனாட்சி சுந்தரேஸ்வரருடன் புறப்பட்டது தேர்... மக்கள் வெள்ளத்தில் திணறும் மாமதுரை!

குட் நியூஸ்... மருத்துவக் காப்பீட்டில் மகத்தான மாற்றம்... வயது வரம்பு நீக்கம்!

இந்தியா கூட்டணி கூட்டத்தில் ரகளை... ராஷ்டிரிய ஜனதாதளம் - காங்கிரஸ் கடும் மோதல்!

நேரடி வரி வசூல் 19,58,000 கோடி ரூபாய்... கடந்த நிதியாண்டில் வரி வசூலில் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in