இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

பாகிஸ்தானியர்
பாகிஸ்தானியர்

துபாயில் வரலாறு காணாத மழை பெய்ததற்கு அபுதாபியில் கட்டப்பட்ட இந்து கோயில்தான் காரணம் என்று பாகிஸ்தானியர் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது.

பாலைவன பகுதியான வளைகுடா நாடுகளில் மழை பொழிவது ஆச்சரியமான ஒன்று. செயற்கை முறையிலேயே அங்கு பெரும்பாலும் மழை பொழிவிக்கப்படுகின்றன. இந்நிலையில், வளைகுடா நாடுகளுக்கு அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, ஓமன், பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளில் கடந்த வாரம் வரலாறு காணாத வகையில் மழை பொழிந்தது.

வருடம் முழுவதும் பொழிய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்தது. முக்கியமாக, துபாய் நகரமே மழை வெள்ளத்தில் மிதந்தது. துபாயின் சர்வதேச விமான நிலையத்தில் விமானங்கள் நீரில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. இதனால், அங்கு விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

துபாயில் மழை
துபாயில் மழை

இந்நிலையில், துபாயில் பெய்த வரலாறு காணாத மழைக்கு, ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயண் கோயில்தான் காரணம் என்று ஒரு பாகிஸ்தானியர் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அபுதாபியில் கட்டப்பட்ட முதல் இந்து கோயிலான சுவாமி நாராயண் கோவிலை, கடந்த பிப்ரவரி 14-ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

இந்நிலையில் கோயில் திறக்கப்பட்ட சில மாதங்களுக்குள் அதைப்பற்றி இப்படியான அதிர்ச்சி அளிக்கும் கருத்து சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


+2க்கு பின்... பிசினஸ், காமர்ஸ், டிஜிட்டல் மார்க்கெட்டிங்... படிப்புகளுக்கு என்ன வாய்ப்பு?

பச்சைப் பட்டு உடுத்தி வைகையாற்றில் இறங்கினார் கள்ளழகர்... விண்ணதிர ஒலித்த 'கோவிந்தா' முழக்கம்!

“விஜயதாரணி ஆசைப்படலை... பேராசைப்பட்டார்...” ஹசீனா சையத் விளாசல்!

நள்ளிரவில் மாட்டுவண்டி பயணம்... 300 ஆண்டு பாரம்பரிய நிகழ்ச்சியில் பக்தர்கள் பரவசம்!

பெரும் சோகம்... காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 குழந்தைகள் உள்பட 22 பேர் பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in