நிதி நிறுவன அதிகாரி துண்டு துண்டாக வெட்டிக்கொலை... உடலைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்!

நிதி நிறுவன அதிகாரி துண்டு துண்டாக வெட்டிக்கொலை... உடலைக் கண்டுபிடிக்க முடியாமல் போலீஸ் திணறல்!

பெங்களூருவில் நிதி நிறுவன அதிகாரி கொலை செய்யப்பட்டு அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டிக் கால்வாயில் வீசிய நிதி நிறுவன அதிபரின் நண்பரைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடகா மாநிலம், பெங்களூரு பசவேஸ்வரா நகரில் உள்ள நிதி நிறுவனத்தில் வளர்ச்சி அதிகாரியாக இருந்தவர் கே.வி. ஸ்ரீகாந்த்(34). இவர் அஞ்சனாத்ரி லே அவுட்டில் வசித்து வந்தார். இவரது நண்பர் மாதவராவ். கடந்த 28-ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஸ்ரீகாந்த் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. தனது கணவரைக் காணவில்லை என்று ஸ்ரீகாந்தின் மனைவி சம்பிகேஹள்ளி காவல் நிலையத்தில் மே 29-ம் தேதி புகார் அளித்தார்.

பெங்களூரு
பெங்களூரு

இது தொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கே.ஆர்.புரம் விஜினாபுரத்தில் உள்ள மாதவ்ராவ் வீட்டிற்கு ஸ்ரீகாந்த் சென்றது தெரிய வந்தது. அத்துடன் மே 28-ம் தேதி மாதவ்ராவ் வீட்டிற்குள் ஸ்ரீகாந்த் செல்வது சிசிடிவி கேமராவிலும் பதிவாகி இருந்தது. ஆனால், வீட்டை விட்டு ஸ்ரீகாந்த் வெளியேறியது பதிவாகவில்லை. இதையடுத்து மாதவராவ் வீட்டை போலீஸார் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் ரத்தக்கறை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையறிந்த மாதவ்ராவ் தலைமறைவானார்.

அவரை போலீஸார் வலைவீசி தேடினர். இந்த நிலையில், ஆந்திராவில் மாதவ்ராவ் பதுங்கியிருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீஸார், மாதவ்ராவை கைது செய்து பெங்களூரு அழைத்து வந்தனர். அப்போது அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அதிர வைக்கும் பல விஷயங்கள் தெரிய வந்தது.

நண்பரான மாதவ்ராவிடம் 5 லட்ச ரூபாய் ஸ்ரீகாந்த் கடனாக வாங்கி இருந்துள்ளார். அந்த பணத்தை திருப்பித் தராததால் அவர்களுக்கிடையே தகராறு இருந்து வந்துள்ளது. அத்துடன் மாதவ்ராவ் மனைவியுடன் ஸ்ரீகாந்த் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கடந்த மே 28-ம் தேதி காலை மாதவ்ராவ் வீட்டிற்கு ஸ்ரீகாந்த் சென்றுள்ளார். அப்போது பண விஷயம் தொடர்பாக அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது இரும்புக் கம்பியால் ஸ்ரீகாந்த் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். இதில் சரிந்து விழுந்த ஸ்ரீகாந்தின் உடலை மாதவ்ராவ் துண்டு துண்டாக வெட்டி பிளாஸ்டிக் பைகளில் அடைத்துள்ளார். அவற்றை பெலத்தூர் அருகே உள்ள பினாகினி நதியில் வீசியதுடன் தனது செல்போனை அணைத்து வைத்து விட்டு மாதவ்ராவ் ஆந்திராவுக்குத் தப்பிச் சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த வழக்கு தற்போது ராமமூர்த்தி நகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கொலை மற்றும் சாட்சியங்களை அழிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாதவ்ராவ் சொல்லிய இடத்தில் ஸ்ரீகாந்தின் உடலை கடந்த மூன்று நாட்களாக போலீஸார் தேடினர். ஆனால், எந்த தடயமும் கிடைக்கவில்லை. இதனால் மங்களூருவில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஸ்ரீகாந்தின் உடலைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், ஸ்ரீகாந்தின் உடல் கிடைக்கவில்லை.

தற்போது இந்த வழக்கு ராமமூர்த்திநகர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. கொலை நடந்த இடம் ராமமூர்த்தி நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராமமூர்த்திநகர் போலீஸாரால் கொலை (302) மற்றும் சாட்சியங்கள் அழிப்பு (201) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது ராமமூர்த்திநகர் போலீசார் ஸ்ரீகாந்தின் சடலத்தை தேடி வருகின்றனர். கடந்த மூன்று நாட்களாக தேடியும் பலனில்லை. சடலத்தின் துண்டுகள் கால்வாயில் கழுவப்பட்டிருக்கலாம். மங்களூருவில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சடலத்தை தேடும் பணியில் ஈடுபட்டும் பலனில்லை. இதனால் ராமமூர்த்தி நகர் போலீஸார், ஸ்ரீகாந்த் உடல் நீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

நாளை பிரதமராக பதவியேற்கிறார் மோடி... உலகத் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்!

ராமோஜி ராவ் காலமானார்... பிரதமர் மோடி இரங்கல்!

அதிரடியாக குறைந்த தங்கம் விலை... சவரனுக்கு ரூ.1,520 சரிவு!

திமுகவின் மக்களவைக்குழு தலைவர் யார்? முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பிக்கள் கூட்டம்!

பாஜக மாநில தலைவர் பதவி விலக வேண்டும்... திடீரென போர்க்கொடி உயர்த்திய முன்னாள் தலைவர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in