வாக்கு எண்ணிக்கையின் போது பயங்கரம்... மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வெடித்து 5 பேர் படுகாயம்!

வாக்கு எண்ணிக்கையின் போது பயங்கரம்... மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு வெடித்து 5 பேர்  படுகாயம்!

மேற்கு வங்க மாநிலம் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும் முன்பு வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்படுள்ளது.

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 மக்களவை தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அக்கட்சி 22 இடங்களையும், பாஜக 18 தொகுதிகளையும் கைப்பற்றின. காங்கிரஸ் கட்சி இரண்டு இடங்களை மட்டுமே வென்றிருந்தன.

பிரதமர் மோடி - முதல்வர் மம்தா பானர்ஜி
பிரதமர் மோடி - முதல்வர் மம்தா பானர்ஜி

இந்த நிலையில், 2024 மக்களவை தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தனித்து போட்டியிட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பகள் பாஜகவுக்கு சாதகமாக அமைந்துள்ளன. நியூஸ் 18 சிஎன்என் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 21 முதல் 24 இடங்களைக் கைப்பற்றும் என்றும், திரிணமூல் காங்கிரஸ் 18 முதல் 21 இடங்களை மட்டுமே கைப்பற்றும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை காலையில் துவங்குதற்கு சற்று முன்பு, தெற்கு 24 பர்கானாஸ், பாங்கர், சால்தபேரியாவில் நாட்டு வெடிகுண்டு வெடித்தது.

இதில் ஐந்து பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிலர் வெடிகுண்டுகளை தயாரித்துக் கொண்டிருந்த போது இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.. காயமடைந்தவர்களில் ஒருவர் இந்திய மதச்சார்பற்ற முன்னணியின் (ஐஎஸ்எஃப்) பஞ்சாயத்து உறுப்பினர் என்று கூறப்படுகிறது. இந்த குண்டு வெடிப்பு குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்னரே வெற்றிக்கணக்கை தொடங்கிய பாஜக... சூரத் அறிவிப்பால் பாஜகவினர் உற்சாகம்!

புதுச்சேரியில் பரபரப்பு: வாக்கு எண்ணும் மையத்தில் போலீஸார், துணை ராணுவப் படையினர் இடையே உரசல்

அண்ணாமலைக்கு பின்னடைவு... கோவை, நீலகிரியில் திமுக முன்னிலை... திருச்சி, மதுரையில் திமுக கூட்டணி முன்னிலை!

ராகுல் காந்தி ஜிம் ஆரம்பிக்கலாம்; சசி தரூர் ஆங்கிலம் பயிற்றுவிக்கலாம்... காங்கிரஸ் தலைகளை கலாய்க்கும் பாஜக

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in